எதிர்ச்சொல் 2023

1. "அணுகு" என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக. (10-12-2023 TNPSC)
(A) தெளிவு
(B) சோர்வு
(C) பொய்மை
(D) விலகு

2. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல். 'எல்' - என்பதன் எதிர்ச்சொல் (10-12-2023 TNPSC)
(A) பகல்
(B) நண்பகல்
(C) இரவு
(D) மாலை

3. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் "உதித்த" (10-12-2023 TNPSC)
(A) நிறைந்த
(B) மறைந்த
(C) குறைந்த
(D) தோன்றிய

4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் "ஊக்கம்" (09-12-2023 TNPSC)
(A) ஆக்கம்
(B) சோர்வு
(C) பக்கம்
(D) தெளிவு

5. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் "உண்மை" (09-12-2023 TNPSC)
(A) வாய்மை.
(B) மெய்மை
(C) தூய்மை
(D) பொய்மை

6. "ஐயம்" என்பதன் எதிர்சொல்லை எழுதுக. (09-12-2023 TNPSC)
(A) தெளிவு
(B) சோர்வு
(C) பொய்மை
(D) விலகு

7. "தாழ்வு" - என்பதன் எதிர்ச்சொல். (05-12-2023 TNPSC)
(A) தொலைவு
(B) தூரம்
(C) உயர்வு
(D) தாமதம்

8. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் :
"இசை" எதிர்ச்சொல் தருக. (05-12-2023 TNPSC)
(A) புகழ்
(B) இகழ்
(C) வசை
(D) நசை

9. "நீக்குதல்" என்னும் சொல்லின் எதிர்ச்சொல் (05-12-2023 TNPSC)
(A) போக்குதல்
(B) தள்ளுதல்
(C) அழித்தல்
(D) சேர்த்தல்

10. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்: 'இடும்பை' - எதிர்ச்சொல் தருக. (05-10-2023 TNPSC)
(A) வறுமை
(B) இன்பம்
(C) துன்பம்
(D) சோம்பல்

11. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்: 'அணுகு' (05-10-2023 TNPSC)
(A) பழகு
(B) தெளிவு
(C) விலகு
(D) துணிவு