7th தமிழ் இயல் 3.5 வழக்கு
1. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை? வழக்கு எனப்படும்
2. வழக்கு எத்தனை வகைப்படும்? இரண்டு வகை (இயல்பு வழக்கு, தகுதி வழக்கு)
3. ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது?
இயல்பு வழக்கு
4. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்? மூன்று (இலக்கனமுடையது, இலக்கணப்போலி, மரூஉ)
5. இலக்கண நெறி முறையாக அமைத்த சொல்? இலக்கனமுடையது
6. இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள்? இலக்கணப்போலி எனப்படும்
7. இலக்கணப்போலியை முன்பின்னாகத் ----- எனவும் குறிப்பிடுவர்? தொக்க போலி
8. முன்பின்னாகத் தொக்க போலிக்கு எகா? புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்
9. இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குவது? இலக்கணப்போலி எனப்படும்
10. வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என்று வழங்குவது ----- எனப்படும்? மரூஉ
11. இலக்கண நெறியிலிருது பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் ----- எனப்படும்? மரூஉ
12. மரூஉக்கு எகா? கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு
13. ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது? தகுதி வழக்கு எனப்படும்
14. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்? மூன்று (இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி)
15. பிறரிடம் வெளிப்படையாக சொல்லத் தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது? இடக்கரடக்கல் எனப்படும்
16. இடக்கரடக்கல் எகா? கால் கழுவி வந்தான், குழந்தை வெளியே போய்விட்டது, ஒன்றுக்கு போய் வந்தேன்
17. மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை ----- என்பர்? மங்கலம்
18. மங்கலம் எகா? ஓலை - திருமுகம் கருப்பு ஆடு - வெள்ளாடு சுடுகாடு - நன்காடு விளக்கை அணை - விளக்கை குளிரவை
19. ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்க தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் ----- எனப்படும்? குழுஉக்குறி
20. குழுஉக்குறி எகா? பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது) ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)
21. "அறம் செய விரும்பு" என்பது யாருடைய வாக்கு? ஒளவையார்
22. சொல்லில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து வந்து அதே பொருளை தருவது ----- எனப்படும்? போலி
23. போலி எத்தனை வகைப்படும்? மூன்று (முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி)
24. சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது? முதற்போலி
25. முதற்போலிக்கு எகா? பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு மயல் - மையல்
26. சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது? இடைப்போலி
27. இடைப்போலிக்கு எகா? அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி அரயர் - அரையர்
28. சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது? கடைப்போலி
29. கடைப்போலிக்கு எகா? அகம் - அகன் நிலம் - நிலன் முகம் - முகன் பந்தல் - பந்தர் சாம்பல் - சாம்பர்
30. முற்றுப்போலிக்கு எகா? ஐந்து - அஞ்சு
31. ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்கு பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது ----- எனப்படும்? முற்றுப்போலி
32. பொருத்துக
a. பந்தர் - 1. முதற்பொலி
b. மைஞ்சு - 2. முற்றுப்போலி
c. அஞ்சு - 3. d. அரையர் -
4. கடைப்போலி
a - 4, b - 1, c - 2, d - 3
33. ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது? எழுவாய்
34. ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது? பயனிலை
35. யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது? செய்யப்படுபொருள்
36. கலைச்சொல் அறிவோம்
ballad - கதைப்பாடல்
courage - துணிவு
sacrifice - தியாகம்
political genius - அரசியல் மேதை
elocution - பேச்சாற்றல்
unity - ஒற்றுமை slogan - முழக்கம்
equality - சமத்துவம்