8th தமிழ் இயல் 5.5

8th தமிழ் இயல் 5.5
: :

1. ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது? சொல் எனப்படும்
2. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது? சொற்றோடர் அல்லது தொடர்
3. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ வினை பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அது? தொகைநிலைத் தொடர்
4. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? 6 வகைப்படும்
5. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது? உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
6. காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை ----- என்பர்? வினைத்தொகை
7. பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது? பாண்புத்தொகை
8. சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருதை ----- என்பர்? இருபெயரொட்டுப் பண்புத்தொகை
9. உவமைக்கும் உவமேயத்துக்கும் இயையில் போல, போன்ற நிகர, அன்ன முதலிய உவம உருபுகள் ஒன்று மறைந்து வருவது? உவமத்தொகை
10. சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை ----- என்பர்? உம்மைத்தொகை
11. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது ----- எனப்படும்? எண்ணும்மை
12. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது? அன்மொழித்தொகை
13. ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அதனைத் ----- என்பர்? தொகாநிலைத் தொடர்
14. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? ஒன்பது வகை
15. ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது? அடுக்குத்தொடர்
16. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது? வேற்றுமைத்தொகை
17. செம்மரம் என்னும் சொல் ----- த்தொகை? பண்புத்தொகை
18. கண்ணா வா என்பது ----- த் தொடர்? விளித் தொடர்
19. முல்லை நில மக்கள் எதில் வல்லவர்? ஆயர்கள் குழல் ஊதுவதில்
20. முல்லை நில மக்கள் பற்றிக் கூறியவர் யார்? திருப்பதிகத்தில் சம்மந்தர்
21. crafts ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? கைவினைப்பொருட்கள்
22. flute ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? புல்லாங்குழல்
23. drum ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? முரசு
24. basketry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? கூடைமுடைதல்
25. knitting ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? பின்னுதல்
26. horn ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? கொம்பு
27. artisan ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? கைவினைஞர்
28. rite ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? சடங்கு