6th தமிழ்-இயல் 1.5 தமிழ்-எழுத்துக்களின்-வகை-தொகை

6th தமிழ்-இயல் 1.5 தமிழ்-எழுத்துக்களின்-வகை-தொகை
: :

1. தமிழ்மொழியில் இலக்கணம் எத்தனை வகைப்படும்? ஐந்து (எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்)
2. ஒலி வடிவமாக எழுதப்படுவதும் வரி வடிவமாகவும் எழுதப்படுவதும் எது? எழுத்து
3. உயிருக்கு முதன்மையானது எது? காற்று
4. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது எந்த எழுத்துக்கள் பிறக்கின்றன? உயிர் எழுத்துக்கள்
5. உயிர் எழுத்துக்கள் எத்தனை? 12
6. தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் எத்தனை? ஐந்து (அ, இ, உ, எ, ஒ)
7. தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை? ஏழு (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள)
8. கால அளவை குறிப்பது எது? மாத்திரை
9. ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் காலஅளவு எவ்வளவு? ஒரு மாத்திரை
10. குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு? ஒரு மாத்திரை
11. நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு? இரண்டு மாத்திரை
12. மெய் எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு? அரை மாத்திரை
13. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு எவ்வளவு? அரை மாத்திரை
14. மெய் எழுத்துக்கள் எத்தனை? 18
15. மெல்லின எழுத்துக்கள் எவை? ங், ஞ், ண், ந், ம், ன்
16. வல்லின எழுத்துக்கள் எவை? க், ச், ட், த், ப், ற்
17. இடையின எழுத்துக்கள் எவை? ய், ர், ல், வ், ழ், ள்
18. மெய் எழுத்துக்கள் பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை? உயிர்மெய் எழுத்துக்கள்
19. கலைச்சொற்கள்: 
Clockwise - வலஞ்சுழி
Internet - இணையம்
Search engine - தேடுபொறி
Anti clockwise - இடஞ்சுழி
Voice search - குரல்தேடல்
Touch screen - தொடுதிரை