6th தமிழ்-இயல் 3.5 மொழிமுதல்-இறுதிஎழுத்துகள்

6th தமிழ்-இயல் 3.5 மொழிமுதல்-இறுதிஎழுத்துகள்
: :

1. மொழி என்பதற்குச் _____ என்னும் பொருளும் உண்டு? சொல்
2. சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை _____ என்பர்? மொழிமுதல் எழுத்துகள் (உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்)
3. சொல்லின் முதலில் வரும் எழுத்துகள்
i) உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். 
ii) க, ச, த, ந, ப, ம ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும். 
iii) ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும். 
iv) ங - வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எடுத்துக்காட்டு (ஙனம்) 
v) ஞ - வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். 
vi) ய - வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யெள ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். 
vii) வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
4. மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்?
i) மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா 
ii) ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது. 
iii) ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது. 
iv) ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெர்மெய் எழுத்து வரிசைகளில் மொ ழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.
5. சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள் _____ என்பர்? மொழி இறுதி எழுத்து
6. மொழி இறுதி எழுத்துகள்?
i) உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும். 
ii) ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். 
எடுத்துக்காட்டு (உரிஞ், வெரிந், அவ்)
7. மொழி இறுதியாகா எழுத்துகள்?
i) சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை. 
ii) ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது. 
iii) க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை. 
iv) உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது. 
v) எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை. 
vi) ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை. 
vi) நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்.
8. சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்?
i) மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும். 
ii) உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். 
iii) ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
9. அளபெடையில் மட்டுமே ______ ழுத்துகள் சொல்லின் இடையில் வரும்? உயிர் எழுத்துக்கள்
10. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்? சர். சி. வி. இராமன்
11. “இராமன் விளைவு” என்னும் கண்டுபிடிப்பை சர். சி. வி. இராமன் வெளியிட்ட ஆண்டு எது? 1928 பிப்ரவரி - 28
12. இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவர் யார்? சர். சி. வி. இராமன்
13. “தேசிய அறிவியல் தினம்" கொண்டாப்படும் நாள் எது? பிப்ரவரி - 28
14. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது? i) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது? 
ii) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை? 
iii) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது? 
iv) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
v) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
15. செயற்கை நுண்ணறிவு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Artificial Intelligence
16. மீத்திறன் கணினி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Super Computer
17. செயற்கைக் கோள் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Satellite
18. நுண்ணறிவு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Intelligence