6th தமிழ்-இயல் 8.1 பராபரக்-கண்ணி

6th தமிழ்-இயல் 8.1 பராபரக்-கண்ணி
: :

6th தமிழ் இயல் 8: எல்லாரும்-இன்புற  
8.1 பராபரக்-கண்ணி
1. "தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்? தாயுமானவர்
2. தண்டருள் என்ற சொல்லின் பொருள்? குளிர்ந்த கருணை
3. பணி என்ற சொல்லின் பொருள்? தொண்டு
4. கூர் என்ற சொல்லின் பொருள்? மிகுதி
5. எய்தும் என்ற சொல்லின் பொருள்? கிடைக்கும்
6. செம்மையருக்கு என்ற சொல்லின் பொருள்? சான்றோருக்கு
7. எல்லாரும் என்ற சொல்லின் பொருள்? எல்லா மக்களும்
8. ஏவல் என்ற சொல்லின் பொருள்? தொண்டு
9. அல்லாமல் என்ற சொல்லின் பொருள்? அதைத்தவிர
10. பராபரமே என்ற சொல்லின் பொருள்? மேலான பொருளே
11. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர் யார்? தாயுமானவர்
12. "தமிழ் மொழியின் உபநிடதம்" எனப் போற்றப்படும் நூல்? தாயுமானவர் பாடல்கள்
13. ‘கண்ணி’ என்பது? இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை
14. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? தம்முயிர்
15. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? இன்புற்றிருக்க
16. 'தானென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? தான் + என்று
17. 'சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்?
சுறுசுறுப்பு