6th தமிழ்-இயல் 1.2 தமிழ்க்கும்மி
1.2 தமிழ்க்கும்மி
1. தமிழ்க்கும்மி பாடலின் ஆசிரியர் யார்? பெருஞ்சித்திரனார்
2. "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி" என்ற பாடலின் ஆசிரியர் யார்? பெருஞ்சித்திரனார்
3. ஆழிப் பெருக்கு என்பதன் பொருள் என்ன? கடல் கோள்
4. மேதினி என்பதன் பொருள் என்ன? உலகம்
5. ஊழி என்பதன் பொருள் என்ன? நீண்ட தொருக்காலப்பகுதி
6. உள்ளப்பூட்டு என்பதன் பொருள் என்ன? அறிய விரும்பாமை
7. பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன? மாணிக்கம்
8. பாவலேறு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்? பெருஞ்சித்திரனார்
9. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்? பெருஞ்சித்திரனார்
10. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்ற இதழ்களை நடத்தியவர் யார்? பெருஞ்சித்திரனார்
11. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது? எட்டு
12. 'வான்தோன்றி, வளி தோன்றி, நெருப்பு தோன்றி' எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? வாணிதாசன்
13. தாய் மொழியில் படித்தால் எதை அடையலாம்? மேன்மை
14. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கிவிட்டது எது? மேதினி - உலகம்
15. செந்தமிழ் பிரித்து எழுதுக? செம்மை + தமிழ்
16. பொய்யக்கற்றும் பிரித்து எழுதுக? பொய் + அகற்றும்
17. பாட்டு + இருக்கும் சேர்த்து எழுதுக? பாட்டிருக்கும்
18. எட்டு + திசை சேர்த்து எழுதுக? எட்டுத்திசை
19. "ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றேனும் நூல்பல கொண்டதுவாம்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது? தமிழ்க்கும்மி