6th தமிழ்-இயல் 6.3 வளரும்-வணிகம்

6th தமிழ்-இயல் 6.3 வளரும்-வணிகம்
: :

1. பொருள்களை விற்பவர் யார்? வணிகர்
2. பொருள்களை வாங்குபவர் யார்? நுகர்வோர்
3. பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது? பண்டமாற்று வணிகம்
4. சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதை பெற்றனர்? உப்பு
5. சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் ஆட்டின் பாலைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதை பெற்றனர்? தானியம்
6. வணிகம் எத்தனை வகைப்படும்? இரண்டு (தரைவழி வணிகம், நீர்வழி வணிகம்)
7. "தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? நற்றிணை 183
8. "பாலொடு வந்து கூழோடு பெயரும் ……" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? குறுந்தொகை 23
9. "பொன்னொடு வந்து கறியோடு பெயரும் ……"என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? அகநானூறு 149
10. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் குழுவாக செல்வார்கள். இக்குழுவின் பெயர் என்ன? வணிகச்சாத்து
11. கப்பல்கள் வந்து நின்றுபோகும் இடங்கள்? துறைமுகங்கள்
12. துறைமுக நகரங்கள் ----- என்றும் ----- என்றும் குறிக்கப்பட்டன? பட்டினம், பாக்கம்
13. தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் ----- விளங்கியது? பூம்புகார்
14. வணிகத்தைத் ----- , ----- வணிகம் என்றும் பிரிக்கலாம்? தனிநபர் வணிகம், நிறுவன வணிகம்
15. ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து நடத்துவது? நிறுவன வணிகம்
16. நம் அன்றாடத் தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள்? சிறு வணிகர்கள்
17. நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்பவர்கள்? சிறு வணிகர்கள்
18. பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி வைத்து விற்பனை செய்வது? பெருவணிகம்
19. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது? ஏற்றுமதி
20. பிற நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது? இறக்குமதி
21. தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் எவை? தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு
22. சீனத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் எவை? கண்ணாடி, கற்பூரம், பட்டு
23. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் எது? குதிரைகள்
24. "வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தம் போல் செயின்" என்று வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறும் நூல்? திருக்குறள் - 120
25. “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று கூறும் நூல் எது? பட்டினப்பாலை
26. கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு உதவுவது எது? இணையவழி வணிகம்
27. வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது. பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று ----- செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளள்ளது? மின்னணுப் பரிமாற்றம்
28. "கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? பட்டினப்பாலை
29. "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்எது? திருக்குறள்
30. வீட்டுப் பயன்பாட்டிற்ககாப் பொருள் வாங்குபவர்? நுகர்வோர்
31. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதுக? வணிகச்சாத்து
32. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதுக? பண்டமாற்று
33. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? மின் + அணு
34. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? விரிவு + அடைந்த
35. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக: 
கரன்சி நோட் - பணத்தாள்
பேங்க் - வங்கி
செக் - காசோலை
டிமாண்ட் டிராஃப்ட் - வரைவோலை
டிஜிட்டல் - மின்னணு மயம்
டெபிட் கார்டு - பற்று அட்டை
கிரெடிட் கார்டு - கடன் அட்டை
ஆன்லைன் ஷாப்பிங் - இணையதள வணிகம்
ஈ - காமர்ஸ் - மின்னணு வணிகம்