6th தமிழ்-இயல் 5.5 மயங்கொலிகள்
1. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ----- என்கிறோம்? மயங்கொலிகள்
2. மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை? 8. அவை: ண, ன, ந ல, ழ, ள ர, ற
3. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியையைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது? ண
4. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது? ன
5. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது? ந
6. டகரத்தை அடுத்து வரும் ணகரம் ----- என்று அழைக்கப்படுகிறது? டண்ணகரம்
7. தகரதரத்தை அடுத்து வரும் நகரம் ----- என்று அழைக்கப்படுகிறது? தந்நகரம்
8. றகரதரத்தை அடுத்து வரும் னகரம் ----- என்று அழைக்கப்படுகிறது? றன்னகரம்
9. "ட" என்னும் எழுத்துக்கு முன் "ண்" வரும் அதற்கு எடுத்துக்காட்டு தருக? கண்டம், வண்டி, நண்டு
10. "ற" என்னும் எழுத்துக்கு முன் "ன்" வரும் அதற்கு எடுத்துக்காட்டு தருக? மன்றம், நன்றி, கன்று
11. ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் அதற்கு எடுத்துக்காட்டு தருக? வாணம் – வெடி, பணி - வேலை வானம் - ஆகாயம் பனி – குளிர்ச்சி
12. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து எது? ல
13. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து எது? ள
14. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து எது? ழ
15. பொருள் வேறுபாடு உணர்க:
விலை - பொருளின் மதிப்பு
இலை செடியின் இலை
விளை - உண்டாக்குதல்
இளை - மெலிந்து போதல்
விழை - விரும்பு
இழை - நூல் இழை
16. பொருள் வேறுபாடு உணர்க: -
ஏரி - நீர்நிலை
கூரை - வீட்டின் கூரை
ஏறி - மேலே ஏறி
கூறை - புடவை
17. நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் தோன்றும் எழுத்து எது? ர
18. நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து எது? ற
19. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சிரம் என்பது ----- (தலை / தளை)? தலை
20. இலைக்கு வேறு பெயர் ----- (தளை / தழை) ? தழை
21. வண்டி இழுப்பது ----- (காலை / காளை) ? காளை
22. கடலுக்கு வேறு பெயர் ----- (பரவை / பறவை) ? பரவை
23. பறவை வானில் ----- (பறந்தது / பரந்தது) ? பறந்தது
23. கதவை மெல்லத் ----- (திறந்தான் / திரந்தான்) ? திறந்தான்
24. பூ ----- வீசும். (மனம் /மணம்) ? மணம்
25. புலியின் ----- சிவந்து காணப்படும். (கன் /கண்) ? கண்
26. குழந்தைகள் ----- விளையாடினர். (பந்து /பன்து) ? பந்து
27. வீட்டு வாசலில் ----- போட்டனர். (கோலம் / கோளம்) ? கோலம்
28. Welcome ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? நல்வரவு
29. Readymade Dress ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? ஆயத்த ஆடை
30. Sculptures ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? சிற்பங்கள்
31. Makeup ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? ஒப்பனை
32. Chips ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? சில்லுகள்
33. Tiffin ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? சிற்றுண்டி