8th தமிழ் இயல் 7.4 அறிவுசால்-ஔவையார்

1. எந்த மன்னனின் அன்பினால் ஒளவையார் அரன்மண்ணையிலேயே தங்கிவிட்டார்? அதியமான்
2. கரும்பை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தவர்கள் யார்? அதியமானின் முன்னோர்கள்
3. அதியமான் அறிய நெல்லிக்கனியை யாருக்கு வழங்கினார்? ஒளவையார்
4. நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய நீ இதனை உண்ணாமல் எனக்கு கொடுத்துவிட்டாயே என்று ஒளவையர் யாரிடம் கூறினார்? அதியமானிடம்
5. என்னைப்போன்று ஓர் அரசன் இறந்துபோனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது எனக் ஒளவையாரிடம் கூறியவர்? அதியமான்
6. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கி"என்ற பாடல் வரியை பாடியவர் யார்? ஒளவையார்
7. அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார்? ஓளவையார்
8. தொண்டைமான் யார் மீது படையெடுக்க ஆயத்தமானான்? அதியமான்
9. அதியமான் போரை ஏன் விரும்பவில்லை? நிறைய மனித இழப்புகள் ஏற்படும்
10. தொண்டைமானிடம் பேசி போரை தடுத்து நிறுத்தியவர் யார்? ஒளவையார்
11. தொண்டைமானிடம் படைக்கருவிகள் எவ்வாறு காட்சியளித்தன? புத்தம் புதிதாய், நெய் பூசப்பட்டடு இருந்தது
12. ஒளவையார் தொண்டைமானிடம் அதியமான் போர்க்கருவிகள் பற்றிக் கூறியது என்ன? நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் இருக்கும் (அடிக்கடி போர் புரிவதால்)
13. ஒளவாரியாரின் சொல்லின் உட்பொருளை அறிந்து கொண்டு போர் வேண்டாம் என்று முடிவு செய்தவன் யார்? தொண்டைமான்