8th தமிழ் இயல் 1.3 தமிழ்-வரிவடிவ-வளர்ச்சி
1. மனிதன் தன் கருத்தை பிறருக்கு அறிவிக்க எதை கண்டுபிடித்தான்? மொழியை
2. மனிதன் மொழியை நிலைபெறச் செய்ய எதை உருவாக்கினான்? எழுத்து
3. பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் இதுவே? எழுத்து வடிவ தொடக்க நிலை
4. எழுத்து என்பது ஓலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது இவ்வரி வடிவத்தை ----- என்பர்? ஓவிய எழுத்து
5. ஓர் ஒலிக்கும் ஓர் எழுத்து என உருவான நிலையை ----- என்பர்? ஒலி எழுத்து நிலை
6. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு? 'ஸ' எனும் வட எழுத்து காணப்படுகிறது. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை
7. எப்பொழுது தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தை பெற்றன? அச்சுக்கலை தோன்றிய பின்பு
8. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் எங்கு காணமுடிகிறது? கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும்
9. கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன? கி. பி (பொ. ஆ. மு) மூன்றாம் நூற்றாண்டு முதல்
10. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன? கி. பி (பொ. ஆ. பி) ஏழாம் நூற்றாண்டு முதல்
11. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றல் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்? இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]
12. சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளின் எட்டாம் நுற்றாண்டுக்குப் முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்றுள்ள எழுத்து எது? வட்டெழுத்துக்கள்
13. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து எது? தமிலேழுத்துகள்
14. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? கண்ணெழுத்துகள்
15. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? சிலப்பதிகாரம்
16. பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துக்களை எதில் எழுதினார்? கற்பாறை, செப்பேடு, ஓலை
17. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கத்தில் இருந்தன என்பதற்கான சான்றை எந்த கல்வெட்டு மூலம் அறியலாம்? அரச்சலூர் கல்வெட்டு
18. நேர்கோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன? கற்பாறை
19. பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்? நேர்கோடுகள்
20. வளைகோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன? ஓலை
21. ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்? வளைகோடுகள்
22. சில எழுத்துகைளை அழகுப்படுத்துவதற்காக அவற்றின் ----- பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது? மேற்பகுதி
23. எகர ஒகர குறில் எழுத்துக்களைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது? தொல்காப்பியர்
24. அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை எவ்வாறு கருதப்பட்டன? நெடிலாகக்
25. ஐகார எழுத்துக்களை குறிப்பிட எழுத்துக்களின் முன் ----- புள்ளி இட்டனர்? இரட்டைப் புள்ளி
26. எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ----- வரிசை எழுத்துக்களாக கருதப்பட்டன? ஓளகார வரிசை
27. நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது? துணைக்கால்
28. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது? இனைக்கொம்பு
29. ஓளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது? கொம்புக்கால்
30. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் யார்? வீரமாமுனிவர்
31. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகளை சீர்திருத்தம் செய்தவர் யார்? பெரியார்
32. ணு, ரு, னு என்ற எழுத்துகளை ணா, றா, னா என மாற்றியவர் யார்? பெரியார்
33. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற ----- காரணமாக அமைந்தது? அச்சுக்கலை
34. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ----- என அழைக்கப்படுகிறது? வட்டெழுத்து
35. தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் யார்? தந்தை பெரியார்
36. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ----- என அழைக்கப்பட்டன? கண்ணெழுத்துக்கள்
37. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை கலைந்தவர் யார்? வீரமாமுனிவர்