ஒருமை பன்மை பிழை நீக்குக 2023

ஒருமை பன்மை பிழை நீக்குக : அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ______ உழைப்பை நல்கினார். (05-10-2023 TNPSC)
(A) தனது
(B) தமது
(C) தங்கள்
(D) தாங்கள்

ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது? (05-10-2023 TNPSC)
(A) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது
(B) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தன
(C) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தான்
(D) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தார்கள்

ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது? (05-10-2023 TNPSC)
(A) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது
(B) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
(C) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறப்பாள்
(D) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறப்பார்கள்

ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது? (05-12-2023 TNPSC)
(A) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினர்
(B) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினான்
(C) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினார்
(D) சங்க காலத்திலிருந்தே அரசராயினும் முதியோராயினும் விருந்தினரை போற்றியது

ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக. (05-12-2023 TNPSC)
(A) மணிகளால் காவடியை அழகுப்படுத்துகின்றனர்.
(B) காவடியின் அமைப்புக்கேற்ப சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, என அழைக்கின்றது
(C) பழமையை உணர கலைகள் துணை செய்கின்றன.
(D) தேவராட்டம் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது

ஒருமை பன்மை பிழை நீக்குக.
சிறுமி ____ கையில் மலர்கள் வைத்திருந்தாள். (09-12-2023 TNPSC)
(A) தனது
(B) தமது
(C) தான்
(D) தாம்  

ஒருமை – பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக? (09-12-2023 TNPSC)
(A) பிரெய்லி நூல்கள் உள்ளன
(B) செயற்கை மரம் ஒன்று உள்ளது
(C) ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது
(D) மின் இதழ்கள் நிறைய உள்ளன

ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது? (09-12-2023 TNPSC)
(A) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுவாள்
(B) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறார்கள்
(C) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது
(D) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன

ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது? (10-12-2023 TNPSC)
(A) மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன
(B) தொண்டி,முசிறி, காந்தளூர் என்பன சேர நாட்டின் துறைமுகப் பட்டினங்களாக விளங்கியது
(C) சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டன.
(D) தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், சேர, சோழ பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றது

ஒருமை - பன்மை பிழை நீக்குக.
இவை ______ எனக்குப் பிடித்த நூல்கள் வாங்கினேன். (10-12-2023 TNPSC)
(A) தான்
(B) தாம்
(C) தனது
(D) தமது