பிறமொழிச் சொற்களை நீக்குதல் 2023

1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான - தமிழ்ச் சொல்லை அறிதல் சரியான இணையைத் தேர்க. (10-12-2023 TNPSC)
(A) டிஜிட்டல் - மின்னனு வணிகம்
(B) டெபிட்கார்டு - இணையதள வணிகம்
(C) கிரெடிட் கார்டு - கடன் அட்டை
(D) ஆன்லைன் ஷாப்பிங் - பற்று அட்டை

2. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.
ஜங்கிள் (10-12-2023 TNPSC)
(A) காடு
(B) கார்ட்டூன்
(C) இனிப்பு
(D) சோலை

3. பிற மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக. டி.வி. (10-12-2023 TNPSC)
(A) தொலைக்காட்சி
(B) வானொலி
(C) திரைப்படம்
(D) மின்னஞ்சல்

4. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. சதம் (10-12-2023 TNPSC)
(A) பத்து
(B) ஆயிரம்
(C) நூறு
(D) லட்சம்

5. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக. - 'சிப்ஸ்' (09-12-2023 TNPSC)
(A) சிற்றுண்டி
(B) சில்லுகள்
(C) நொறுக்குத் தீனி
(D) பொரித்த உருளை கிழங்கு

6. பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். தமிழ் புத்தாண்டில் அனைவரும் சந்தோஷமாய் இருந்தனர். (09-12-2023 TNPSC)
(A) மகிழ்ச்சியாய்
(B) பூரிப்பாய்
(C) குதூகலமாய்
(D) இன்பமாய்

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
- 'ஈ - காமர்ஸ்' (09-12-2023 TNPSC)
(A) மின்னணு வணிகம்
(B) காகித வணிகம்
(C) நேரடி வணிகம்
(D) இணையத்தள வணிகம்

8. "செக்" இணையான தமிழ்ச் சொல் (05-12-2023 TNPSC)
(A) காசோலை
(B) வரைவோலை
(C) பணத்தாள்
(D) கடன் அட்டை

9. பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக - இ.மெயில் (05-12-2023 TNPSC)
(A) துரித அஞ்சல்
(B) விரைவு அஞ்சல்
(C) மின்னஞ்சல்
(D) இணையம்

10. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். இக்காலத்திற்கு 'விஞ்ஞான' அறிவு தேவை. (05-12-2023 TNPSC)
(A) அறிவியல்
(B) மின்னணு
(C) இணையம்
(D) சரித்திரம்

11. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் 
சரியான இணையைத் தேர்க (05-12-2023 TNPSC)
(A) கரன்சி நோட் - பணத்தாள்
(B) பேங்க் - காசோலை
(C) செக் - வங்கி
(D) டிமாண்ட் டிராஃப்ட் - பற்றட்டை

12. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அமைந்த இணை எது? (09-09-2023 TNPSC)
(A) டெபிட்கார்டு - பற்று அட்டை
(B) கிரெடிட் கார்டு - வரைவோலை
(C) செக் -  பணத்தாள்
(D) டிமாண்ட் டிராஃப்ட் - கடன் அட்டை

13. பிறமொழி கலவாத தொடரை எடுத்து எழுதுக. (09-09-2023 TNPSC)
(A) இன்று ரோபோ பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
(B) அதிகாலை விழித்தெழுதல் நல்லது
(C) கம்பியூட்டர் காலம் இது.
(D) காலிங்பெல்லை அழுத்துங்கள்

14. ரெடிமேட் டிரஸ் - என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் தேர்க. (09-09-2023 TNPSC)
(A) தயார் ஆடை
(B) தையல் ஆடை
(C) ஆயத்த ஆடை
(D) கைத்தறி ஆடை

15. கையில் மிச்சம் உள்ள தங்கக்கட்டி வெயிட் குறைவானது -இத்தொடரில் 'வெயிட்' என்ற சொல்லின் இணையான தமிழ்ச்சொல் (09-09-2023 TNPSC)
(A) சுமை
(B) கிராம்
(C) அளவு
(D) எடை