6th தமிழ்-இயல் 8.5 பெயர்ச்சொல்

6th தமிழ்-இயல் 8.5 பெயர்ச்சொல்
: :

8.4 பாதம்
1. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய நூல்களை எழுதியவர் யார்? எஸ். ராமகிருஷ்ணன்
2. தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதையை எழுதியவர்? எஸ். ராமகிருஷ்ணன்

8.5 பெயர்ச்சொல்
1. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்? பெயர்ச்சொல்
2. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? ஆறு (பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்)
3. பொருளைக் குறிக்கும் பெயர்? பொருட்பெயர் (எடுத்துக்காட்டு) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி
4. ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர்? இடப்பெயர் (எடுத்துக்காட்டு) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு
5. காலத்தைக் குறிக்கும் பெயர்? காலப்பெயர் (எடுத்துக்காட்டு) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு
6. பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்? சினைப்பெயர் (எடுத்துக்காட்டு) கண், கை, இலை, கிளை
7. பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்? பண்புப்பெயர் (எடுத்துக்காட்டு) வட்டம், சதுரம், செம்மை, நன்மை
8. தொழிலைக் குறிக்கும் பெயர்? தொழிற்பெயர் (எடுத்துக்காட்டு) படித்தல், ஆடுதல், நடித்தல்
9. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம்: - காவியா புத்தகம் படித்தாள்? பொருட்பெயர்
10. காவியா பள்ளிக்குச் சென்றாள்? இடப்பெயர்
11. காவியா மாலையில் விளையாடினாள்? காலப்பெயர்
12. காவியா தலை அசைத்தாள்? சினைப்பெயர்
13. காவியா இனிமையாகப் பேசுவாள்? பண்புப்பெயர்
14. காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும்? தொழிற்பெயர்
15. நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகையாக பிரித்தனர்? இரண்டு (இடுகுறிப்பெயர், காரணப்பெயர்)
16. நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வா்வாறு வழங்கிய பெயர்கள்? இடுகுறிப்பெயர்கள் (எடுத்துக்காட்டு) மண், மரம், காற்று
17. இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும்? இரண்டு (இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர்)
18. ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது ----- எனப்படும்? இடுகுறிப் பொதுப்பெயர் (எடுத்துக்காட்டு) மரம், காடு
19. ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது ----- எனப்படும்? இடுகுறிச் சிறப்புப்பெயர் (எடுத்துக்காட்டு) மா, கருவேலங்காடு
20. காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் ----- எனப்படும்? காரணப்பெயர் (எடுத்துக்காட்டு) நாற்காலி, கரும்பலகை
21. காரணப்பெயர் எத்தனை வகைப்படும்? இரண்டு (காரணப் பொதுப்பெயர், காரணப் சிறப்புப்பெயர்)
22. காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, எனப்படும்? காரணப்பொதுப்பெயர் (எடுத்துக்காட்டு) பறவை, அணி
23. குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது ----- ஆகும்? காரணச்சிறப்புப்பெயர். (எடுத்துக்காட்டு) வளையல், மரங்கொத்தி
24. இடுகுறிப்பெயரை வட்டமிடுக? அ) பறவை, ஆ) மண், இ) முக்காலி, ஈ) மரங்கொத்தி? ஆ) மண்
25. காரணப்பெயரை வட்டமிடுக? அ) மரம், ஆ) வளையல், இ) சுவர், ஈ) யானை? ஆ) வளையல்
26. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக? அ) வயல், ஆ) வாழை, இ) மீன்கொத்தி, ஈ) பறவை? ஆ) வாழை
27. அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்; என்ற பாடலின் ஆசிரியர்? அ. முத்தரையனார், மலேசியக் கவிஞர்
28. கலைச்சொல் அறிவோம்: 
அறக்கட்டளை - Trust
தன்னார்வலர் - Volunteer
இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red Cross
சாரண சாரணியர் - Scouts & Guides
சமூகப் பணியாளர் - Social Worker