7th தமிழ் இயல் 9.5 ஆகுபெயர்
பயணம்
1. கன்னட மொழியிலிருந்து பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? பாவண்ணன்
2. வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் போன்ற நூல்களை எழுதியவர் யார்? பாவண்ணன்
3. பயணம் என்ற சிறுகதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது? பிரயாணம்
ஆகுபெயர்
1. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ----- எனப்படும்? ஆகுபெயர்
2. ஆகுபெயர் எத்தனை பெயர்ச்சொற்களில் வரும்? ஆறு வகை (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)
3. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது ----- எனப்படும்? பொருளாகுபெயர்
4. பொருளாகுபெயரின் வேறு பெயர் என்ன? முதலாகு பெயர்
5. பொருளாகு பெயர்க்கு உதாரணம் தருக? மில்லிகை சூடினாள்
6. இடவாகு பெயர்க்கு உதாரணம் தருக? சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது
7. கலாவாகு பெயர்க்கு உதாரணம் தருக? திசம்பர் சூடினாள்
8. சினையாகு பெயர்க்கு உதாரணம் தருக? தலைக்கு ஒரு பலம் கொடு
9. பண்பாகு பெயர்க்கு உதாரணம் தருக? இனிப்பு தின்றான்
10. தொழிலாகு பெயர்க்கு உதாரணம் தருக? பொங்கல் உண்டால்
11. இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் ----- என்பர்? இரட்டைக்கிளவி
12. இரட்டைக்கிளவிக்கு உதாரணம் தருக? விறுவிறு, கலகல, மளமள
13. அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை ----- என்பர்? அடுக்குத்தொடர்
14. அடுக்குத்தொடர் உதாரணம் தருக? பாம்பு பாம்பு பாம்பு, பிடி பிடி பிடி
15. ----- ல் உள்ள சொற்களைப் தனித்தனியே பிரித்து பார்த்தாலும் அவற்றுக்கு பொருள் உண்டு? அடுக்குத்தொடரில்
16. ----- யைப் பிரித்தால் அது பொருள் தராது? இரட்டைக்கிளவி
17. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ----- முறை வரை வரும்?
இரண்டு முதல் நான்கு
18. இரட்டைக்கிளவியில் ஒரு சொல் ----- முறை மட்டுமே வரும்? இரண்டு
19. அடுக்குத் தொடரில் சொற்கள் ----- நிற்கும்? தனித்தனியே
20. இரட்டைக்கிளவியில் சொற்கள் ----- நிற்கும்? இணைந்தே
21. அடுக்குத் தொடர் ----- பொருள்கள் காரணமாக வரும்? விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம்
22. இரட்டைக்கிளவி ----- அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்? வினைக்கு
23. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ----- என்பர்? பொருளாகு பெயர்
24. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது என்ன ஆகுபெயர்? சினையாகு பெயர்
25. மழை சடசடவெனப் பெய்தது இத்தொடரில் அமைந்துள்ளது எது? இரட்டைக்கிளவி
26. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ----- முறை வரை அடுக்கி வரும்? நான்கு
27. religion ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? சமயம்
28. simplicity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? எளிமை
29. charity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? ஈகை
30. dignity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? கண்ணியம்
31. doctrine ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? கொள்கை
32. philosophy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? தத்துவம்
33. integrity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? நேர்மை
34. sincerity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? வாய்மை