7th தமிழ் இயல் 7.4 திருநெல்வேலிச்-சீமையும்-கவிகளும்

7th தமிழ் இயல் 7.4 திருநெல்வேலிச்-சீமையும்-கவிகளும்
: :

1. பாரதியார் பிறந்த இடம் எது? எட்டையபுரம்
2. தேசிய விநாயகனார் பிறந்த இடம் எது? கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
3. தேசிக விநாயகனார் கல்வி கற்ற இடம் எது? திருநெல்வேலி
4. கோவில்பட்டியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் கிழேக்கே அமைந்த ஊர் எது? எட்டையபுரம்
5. வெங்கடேச எட்டப்ப ராசாவை பற்றி பாடல் இயற்றியவர் யார்?  கடிகைமுத்துப் புலவர்
6. தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம் எது? சீவலப்பேரி என்கிற முக்கூடல்
7. முக்கூடல் பற்றிய பிரபந்தம் எது? முக்கூடல் பள்ளு
8. "ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி மலை" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? முக்கூடல் பள்ளு
9. மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த புலவர் யார்? பலபட்டரைச் சொக்கநாதப் புலவர்
10. பலபட்டரைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள யாரை தரிசித்தார்? காந்திமதி தாய்
11. சிவைகுண்டப் பெருமாளை பற்றி பாடியவர் யார்? பிள்ளை பெருமாள்
12. நம்மாழ்வார் அவதரித்த தளம் எது? ஆழ்வார் திருநகரி
13. திருவாய்மொழியை இயற்றியவர் யார்? நம்மாழ்வார்
14. கொற்கை முத்தை பற்றி பாடிய புலவர் யார்? முத்தொள்ளாயிர ஆசிரியர்
15. காயல்பட்டினத்தில் இருந்து பெருவணிகர் யார்? சிதக்காதி
16. தமிழ் புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்? சீதக்காதி
17. சீதக்காதியின் மறைவை ஆற்றாமையோடு பாடியவர் யார்? நமச்சிவாயப் புலவர்
18. "பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்" என்ற பாடலை இயற்றியவர் யார்? நமச்சிவாயப் புலவர்
19. திருப்புகழைப் பாடியவர் யார்? அருணகிரிநாதர்
20. கழுகுமலையில் வீற்றிருக்கும் இறைவன் யார்? முருகன்
21. காவடிச்சிந்துவை பாடியவர் யார்? அண்ணாமலையார்
22. காவடிப்பாட்டை எவ்வாறு கேட்க வேண்டும்? பம்பை, மேளம், ஆட்டம்
23. சங்கரன் கோவில் கோமதித் தாயை பாடியவர் யார்? அழகிய சொக்கநாதர்
24. "வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்" என கோமதித் தாயை புகழ்ந்து பாடியவர் யார்? அழகிய சொக்கநாதர்
25. கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்? அழகிய சொக்கநாதர்
26. சங்கரன் கோவிலுக்கு வடக்கே எட்டு மைலில் அமைத்துள்ள தளம் எது? கருவைநல்லூர்
27. கிரிவலம் வந்த நல்லூர் திருத்தலத்தில் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் இயற்றிய நூல்கள் எவை? திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி
28. 1300 வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு வந்தவர் யார்? திருஞான சம்பந்தர்
29. "நுண் துளி தூங்கும் குற்றாலம் "என்று பாடியவர் யார்? திருஞான சம்பந்தர்
30. "உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் போர்வேண்டேன்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? மாணிக்கவாசகர்
31. "குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே "என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? மாணிக்கவாசகர்
32. குற்றாலக் குரவஞ்சியை இயற்றியவர் யார்? திரிகூடராசப்பக் கவிராயர்
33. "கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? திரிகூடராசப்பக் கவிராயர்
34. டி. கே. சி என அழைக்கப்படுபவர் யார்? டி. கே. சிதம்பரநாதர்
35. இரசிகமணி என்று சிறப்பிக்கப்படுபவர் யார்? டி. கே. சிதம்பரநாதர்
36. தமது வீட்டில் வட்டத் தொட்டி என்னும் பெயரில் இலக்கிய கூட்டம் நடத்தியவர் யார்? டி. கே. சிதம்பரநாதர்
37. கடித இலக்கியத்தின் முன்னோடி என அழைக்கபடுபவர் யார்? டி. கே. சிதம்பரநாதர்
38. தமிழிசைக் காவலர் என அழைக்கபடுபவர் யார்? டி. கே. சிதம்பரநாதர்
39. வளர்தமிழ் ஆர்வலர் என அழைக்கபடுபவர் யார்? டி. கே. சிதம்பரநாதர்
40. குற்றால முனிவர் என அழைக்கபடுபவர் யார்? டி. கே. சிதம்பரநாதர்
41. இதய ஒலி என்னும் நூலை எழுதியவர் யார்? டி. கே. சிதம்பரநாதர்