விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் 2023
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்? (10-12-2023 TNPSC)
(A) கரகாட்டம் என்றால் என்ன?
(B) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
(C) கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை?
(D) கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி(10-12-2023 TNPSC)
(A) உவமை என்பது யாது?
(B) உவமை அணியை விளக்குக?
(C) உருவக அணியை விளக்குக?
(D) உவமேயம் என்பது யாது?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில் ஆநிரைகளைச் சொத்தாகக் கருதினர் (10-12-2023 TNPSC)
(A) சிறுகுழுக்களாக வாழ்ந்த காலத்தில் மக்கள் சொத்தாக எதைக் கருதினர்?
(B) சிறுகுழுக்கள் என்ன சொத்தாகக் கருதினர்?
(C) ஆநிரையைச் சொத்தாக கருதியவர்கள் யார்?
(D) மக்கள் வாழ்ந்த காலத்தில் சொத்து எது?
"பொய்கையாழ்வார் துன்பம் நீங்க வேண்டி பாமாலை சூட்டுகிறார்" சரியான வினாவைத் தேர்ந்தெடு. (09-12-2023 TNPSC)
(A) பொய்கையாழ்வார் பாமாலை சூட்டுகிறாரா?
(B) பொய்கையாழ்வாரின் பாமாலை எது?
(C) பொய்கையாழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?
(D) பொய்கையாழ்வார் துன்பம் எது?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
கரிகாலன் கல்லணையைக் கட்டினான். (09-12-2023 TNPSC)
(A) கரிகாலனின் வேறு பெயர் யாது?
(B) கரிகாலன் கல்லணையை எங்கு கட்டினான்?
(C) கல்லணை எப்போது கட்டப்பட்டது?
(D) கல்லணையைக் கட்டியது யார்?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
போரில் வெற்றி பெற்ற மன்னனைப் புகழ்ந்து பாடுவது பாடாண் திணை எனப்படும் (05-12-2023 TNPSC)
(A) பாடாண்திணை பற்றி விளக்குக
(B) பாடாண்திணை சிறுகுறிப்புத் தருக
(C) பாடாண்திணை பொருள் யாது?
(D) பாடாண்திணை என்றால் என்ன?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும் (05-12-2023 TNPSC)
(A) இயற்சொல்லின் வகை யாது?
(B) இயற்சொல் என்றால் என்ன?
(C) எளிதில் பொருள் விளங்கும் சொல்லைக் கூறுக?
(D) சொல் என்றால் என்ன?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது (05-12-2023 TNPSC)
(A) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
(B) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
(C) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
(D) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' எனப் பாராட்டியவர் தந்தை பெரியார் ஆவார். விடைக்கேற்ற மிகச் சரியான வினாவைத் தேர்ந்தெடுக்க. (05-10-2023 TNPSC)
(A) 'கல்விக் கண் திறந்தவர்' என்று பாராட்டப்பட்டவர் யார்?
(B) தந்தை பெரியார் யாரைப் பாராட்டினார்?
(C) தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் யார்?
(D) காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்'' எனப் பாராட்டியவர் யார்?
விடைக் கேற்ற வினாவைத் தெரிவு செய்க :
'தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்' (05-10-2023 TNPSC)
(A) உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எங்குள்ளது?
(B) உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எத்தனை?
(C) உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?
(D) புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா?