6th தமிழ்-இயல் 2.6 திருக்குறள்

1. மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை எவை?அறநூல்கள்
2. அறநூல்களில் ‘உலகப் பொது மறை‘ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல் எது? திருக்குறள்
3. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் நூல் எது?திருக்குறள்
4. திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்? இரண்டாயிரம்
5. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியவர் யார்? திருவள்ளுவர்
6. வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்? திருவள்ளுவர்
7. திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? மூன்று (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
8. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று? திருக்குறள்
9. திருக்குறள் எத்தனை அதிகாரங்களை கொண்டது? 133
10. திருக்குறள் எத்தனை குறள்பாக்களைக் கொண்டுள்ளது? 1330
11. "இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்கும் நூல் எது? திருக்குறள்
12. உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் பெற்ற நூல் எது? திருக்குறள்
13. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல் எது? திருக்குறள்
14. ஒருவர்க்குச் சிறந்த அணி எது? இன்சொல்
15. இனிய _____ இன்னாத கூறல் கனியிருப்பக் _____ கவர்ந் தற்று? உளவாக, காய்கவர்ந்
16. அன்பிலார் ____ தமக்குரியர் அன்புடையார் _____ உரியர் பிறர்க்கு? எல்லாம், என்பும்
17. ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு எது? 2016 ஆம் ஆண்டு
18. 2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றவர் யார்? தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்
19. கலைச்சொல் அறிவோம்:
Continent - கண்டம்
Climate - தட்பவெப்பநிலை
Weather - வானிலை
Migration - வலசை
Sanctuary - புகலிடம்
Gravitational Field - புவிஈர்ப்புப்புலம்