6th தமிழ்-இயல் 7.2 தமிழ்நாட்டில்-காந்தி

TNPSC Group 4 Tamil,

6th தமிழ்-இயல் 7.2 தமிழ்நாட்டில்-காந்தி
: :

1. காந்தி அருங்காட்சியகம் எங்கு உள்ளது? மதுரை
2. காந்தியடிகள் முதன் முதலாக சென்னைக்கு வந்த ஆண்டு எது? 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
3. ரெளலட் சட்டம் எதிர்ப்பு போராட்டம் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் யாருடைய வீட்டில் நடைப்பெற்றது? இராஜாஜி
4. இராஜாஜியின் வீட்டில் காந்தியடிகள் அருகில் அமர்ந்தவர் யார்? பாரதியார்
5. "தமிழ்நாட்டுக் கவிஞர்”, "தமிழ்நாட்டு சொத்து என்று இராஜாஜி யாரைக் குறிப்பிட்டார்? பாரதியார்
6. இந்தியாவின் சொத்து என்று பாரதியாரை குறிப்பிட்டவர் யார்? காந்தியடிகள்
7. காந்தி அவர்களை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க அழைத்தவர் யார்? பாரதியார்
8. “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா? ” என்று காந்தியடிகள் யாரிடம் கூறினார்? பாரதியார்
9. காந்தியடிகள் யாரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்? பாரதியார்
10. காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்த ஆண்டு எது? 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
11. காந்தியடிகள் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை எந்த நகருக்கு சேரும்? தமிழ்நாடு - மதுரை
12. உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் பூண்டவர்? காந்தியடிகள்
13. காந்தியடிகள் காரைக்குடியில் எந்த ஊரில் தங்கி இருந்தார்? கானாடுகாத்தான்
14. உயர்வு தாழ்வு நிகழ்வு நடந்தால் காந்தியடிகள் எந்த இடங்களுக்கு செல்ல மறுத்துவிட்டார்? மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குற்றால அருவி
15. காந்தியடிகள் தமிழை எப்போது கற்கத் தொடங்கினார்? தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில்
16. காந்தியை கவர்ந்த தமிழ்க்கையேடு எழுதியவர்? ஜி. யு. போப்
17. காந்தியை கவர்ந்த தமிழ்க்கையேடு? திருக்குறள்
18. 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்? காந்தியடிகள்
19. 1937 ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது? சென்னை
20. 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்ப்புக் குழு தலைவர்? உ. வே. சாமிநாதர்
21. ”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தி யாரைப் பற்றி கூறினார்? உ. வே. சாமிநாதர்
22. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ----- ? மதுரை
23. இலக்கிய மாநாடு நடைபெற்ற இடம்? சென்னை
24. தமிழ்நாட்டுக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? பாரதியார்
25. தமிழ்க் கையேடு என அழைக்கப்படுபவர் யார்? ஜி. யு. போப்