7th தமிழ் இயல் 2.2 விலங்குகள்-உலகம்
1. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் எது? காடு
2. மனிதனின் முதல் இருப்பிடம் எது? காடு
3. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது? முண்டந்துறை புலிகள் காப்பகம்
4. முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு? 895சதுர கிலோ மீட்டர்
5. உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன? இரண்டு (ஆகிய யானை, ஆப்பிரிக்க யானை)
6. யானைக் கூட்டதிற்குத் தலைமை தாங்குவது எது? பெண் யானை
7. மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு எது? யானை
8. யானை ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு உட்கொள்ளும்? 250 கிலோ புல்
9. யானை ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்தும்? 65 லிட்டர்
10. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைத்துள்ள இடம்? மேட்டுப்பாளையம் (கோவை)
11. இளநிலை மற்றும் முதுநிலை வனவியல் படிப்புகள் எங்கு கற்பிக்கப்படுகிறது? கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
12. கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில் குட்டியை ஈனும்? 90நாட்கள் (3 மாதம்)
13. எந்த விலங்கு ஒரு காட்டின் வளத்தை குறிக்கும் குறியீடாக கருதப்படுகிறது? புலி
14. கிர் சரணாலயம் எங்கு உள்ளது? குஜராத் மாநிலம்
15. சிங்கத்தின் வகைகள் எத்தனை? இரண்டு (ஆகிய சிங்கம், ஆப்பிரிக்க சிங்கம்)
16. நீளம், உயரம், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட சிறந்தது? புலி
17. இயற்கை விஞ்ஞனிகள் காட்டுக்கு அரசன் என்று எந்த விலங்கை கூறுகின்றனர்? புலி
18. இந்தியாவில் காணப்படும் மான் வகைகள்? சருகுமான், மிளாமான், வெளிமான்
19. ஆசிய யானைகளின் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது? தந்தம்
20. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைத்துள்ள இடம்? முண்டந்துறை
21. 'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? காடு + ஆறு
22. 'அனைத்துண்ணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? அனைத்து + உண்ணி
23. 'நேரம் + ஆகி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? நேரமாகி
24. 'வேட்டை + ஆடிய ' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? வேட்டையாடிய
25. 'காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' - என்று அழைக்கப்படும் விலங்கு ----- ? புலி
26. யானைக் கூட்டத்திற்கு ஒரு ----- யானைதான் தலைமை தாங்கும்? பெண்
27. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ----- ? அடர்ந்த முடிகள்