7th தமிழ் இயல் 8.2 அறம் என்னும் கதிர்

7th தமிழ் இயல் 8.2 அறம் என்னும் கதிர்
: :

1. "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக" என்னும் வரியை பாடியவர் யார்? முனைப்பாடியார்
2. வித்து என்பதன் பொருள் என்ன? விதை
3. ஈன என்பதன் பொருள் என்ன? பெற
4. நிலன் என்பதன் பொருள் என்ன? நிலம்
5. களை என்பதன் பொருள் என்ன? வேண்டாத செடி
6. பைங்கூழ் என்பதன் பொருள் என்ன? பசுமையான பயிர்
7. வன்சொல் என்பதன் பொருள் என்ன? கடுஞ்சொல்
8. முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? திருமுனைப்பாடி
9. முனைப்பாடியார் எந்த சமயத்தை சேர்ந்தவர்? சமணம்
10. முனைப்பாடியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? 13 - ம் நூற்றாண்டு
11. முனைப்பாடியார் இயற்றிய நூலின் பெயர் என்ன? அறநெறிச்சாரம்
12. அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது? 225 படல்கள்
13. காந்தியடிகள் எப்போதும் ----- பேசினார்? வாய்மையை
14. இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுததுக? இனிமை + சொல்
15. அறம் + கதிர் என்பதனை சேர்த்தெழுததுக? அறக்கதிர்
16. 'இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன? முதுமை
17. பொருத்துக: 
விளைநிலம் - இன்சொல்
விதை - ஈகை
களை - வன்சொல்
உரம் - உண்மை