7th தமிழ் இயல் 4.3 தமிழரின்-கப்பற்கலை

7th தமிழ் இயல் 4.3 தமிழரின்-கப்பற்கலை
: :

1. பயணம் எத்தனை வகைப்படும்? மூன்று வகை (தரைவழி, நீர்வழி, வான்வழி)
2. நீர்வழிப் பயணம் எத்தனை வகைப்படும்? இரண்டு வகை (உள்நாட்டு நீர்வழி, கடல்நீர் பயணம்)
3. நமக்கு கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையான நூல் எது? தொல்காப்பியம்
4. கடற்பயணத்தை 'முந்நீர் வழக்கம் 'எனக் குறிப்பிடப்படும் நூல் எது?  தொல்காப்பியம்
5. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? திருக்குறள்
6. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டததை விரிவாக விளக்கும் நூல் எது? பட்டினப்பாலை
7. 'உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் 'என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது? அகநானுறு
8. "அருங்கலம் தரீஇயற் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? பதிற்றுப்பத்து
9. பல வகையான கப்பல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிகண்டு எது? சேந்தன் திவாகர நிகண்டு
10. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளை கடக்க பயன்படுத்தியவை எவை? தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்
11. தமிழர்கள் கடல் பயணம் மேற்கோள்ள உதவியவை எது? கலம், வங்கம், நாவாய்
12. பழங்காலத்தில் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எங்குள்ளது? நியூசிலாந்து நாட்டு வெலிங்டன்அருங்காட்சியம்
13. தமிழர்கள் கப்பல் கட்டும் கலைஞர்களை எவ்வாறு அழைத்தனர்?  கம்மியர்
14. "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? மணிமேகலை
15. தமிழர்கள் கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்தினர்? வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல்
16. தமிழர்கள் கப்பல்களின் பக்கங்களுக்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்திறனர்? தேக்கு, வெண்தேக்கு
17. மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை ----- என்பர்? வெட்டுவாய்
18. 'கண்ணடை 'என்பது எந்த மரத்தில் காணப்படும் உருவங்கள்? இழைத்தை மரம்
19. கப்பலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை எந்த நீட்டலளவை மூலம் கணக்கிட்டனர்? தச்சுமுலம்
20. பெரிய படகுகளின் முன் பக்கத்தை எதன் தலையைப் போன்று வடிவமைத்தனர்? யானை, குதிரை, அன்னம் இதை (கரிமுக அம்பி, பரிமுக அம்பி) என அழைத்தனர்
21. மரங்களையும், பலகைகளையும் இணைக்கும்போது அதன் இடையே எதை வைத்தனர்? தேங்காய் நார், பஞ்சு
22. தமிழர்கள் கப்பலின் அடிப்பகுதியில் எதைக்கொண்டு பூசினர்? சுண்ணாம்பும், சணலையும் கலந்து அரைத்து எண்ணெய் கலந்து பூசினர்
23. தமிழர்களின் கப்பல்கள் பழுதடையாமல் உழைத்ததை கண்டு வியந்து பாராட்டிய கடற்பயணி யார்? மார்க்கோபோலோ (இத்தாலி)
24. மரத்திலான ஆணிகளை ----- என்பர்? தொகுதி
25. "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியவர்? வாக்கர்
26. பாய்மரக் கப்பல்கள் எதன் உதவியால் செலுத்தப்பட்டது? காற்று
27. தமிழர் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்கள் எவை? பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம்
28. பாய்மரக் கப்பலில் பயன்படும் கயிர்கள் எவை? ஆஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைக் கயிறு, முட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு
29. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது? பரிபாடல்
30. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் ----- எனப்படும்? எரா
31. கப்பலுக்கு பயன்படும் குறுக்கு மரத்தை ----- என்பர்? பருமல்
32. கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி ----- எனப்படும்? சுக்கான்
33. கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு? நங்கூரம்
34. சமுக்கு ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவது எது? சமுக்கு
35. சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று எந்த நூல் கூறுகிறது? கப்பல் சாத்திரம்
36. கப்பல் செலுத்துபவர்களை என்ன பெயரில் அழைத்தனர்? மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி
37. "நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி வளி தொழில்" என்னும் புறப்பாடல் அடியை பாடியவர் யார்? வெண்ணியக்குயத்தியார்
38. கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக அமைக்கப்படுவது ----- ஆகும்? கலங்கரை விளக்கம்
39. உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டதாக உடையது? கலங்கரை விளக்கம்
40. கலம் என்பதன் பொருள்? கப்பல்
41. கரைதல் என்பதன் பொருள்? அழைத்தல்
42. பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர் என்ற செய்தி இடம்பெற்ற நூல்? புறநானுறு
43. "கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து "என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? புறநானுறு
44. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது? ஓடம்
45. தொல்காப்பியம் கடற்பயணத்தை ----- வழக்கம் என்று கூறுகிறது? முந்நீர்
46. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி? சுக்கான்
47. கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் ----- என அழைக்கப்படும்? தொழுதி
48. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ----- ? நங்கூரம்
49. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ----- எனக் குறிப்பிடப்படும்? கண்ணடை
50. பொருத்துக 
a. எரா - 1. திசைகாட்டும் கருவி 
b. பருமல் - 2. அடிமரம் 
c. மீகாமன் - 3. குறுக்கு மரம் 
d. காந்த ஊசி - 4. கப்பலைச் செலுத்துபவர்
a - 2, b - 3, c - 4, d - 1