6th தமிழ்-இயல் 9.1 ஆசியஜோதி
6th தமிழ் இயல் 9: இன்னுயிர்-காப்போம்
9.1 ஆசியஜோதி
1. உலக உயிர்கர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்? புத்தர்
2. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் யார்? புத்தர்பிரான்
3. புத்தர் எந்த மன்னனுக்கு "உயிர் கொல்லாமை" பற்றி அறிவுரை கூறினார்? பிம்பிசார மன்னன்
4. நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே; என்ற பாடலின் ஆசிரியர் யார்? கவிமணி தேசிக விநாயகனார்
5. அஞ்சினர் என்ற சொல்லின் பொருள் என்ன? பயந்தனர்
6. கருணை என்ற சொல்லின் பொருள் என்ன? இரக்கம்
7. வீழும் என்ற சொல்லின் பொருள் என்ன? விழும்
8. ஆகாது என்ற சொல்லின் பொருள் என்ன? முடியாது
9. நீள்நிலம் என்ற சொல்லின் பொருள் என்ன? பரந்த உலகம்
10. முற்றும் என்ற சொல்லின் பொருள் என்ன? முழுவதும்
11. மாரி என்ற சொல்லின் பொருள் என்ன? மழை
12. கும்பி என்ற சொல்லின் பொருள் என்ன? வயிறு
13. பூதலம் என்ற சொல்லின் பொருள் என்ன? பூமி
14. பார் என்ற சொல்லின் பொருள் என்ன? உலகம்
15. ஆசிய ஜோதி என்ற நூலில் எந்த மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன? பிம்பிசார மன்னன்
16. ஆசிய ஜோதி நூலின் ஆசிரியர் யார்? கவிமணி தேசிக விநாயகனார்
17. தேசிக விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்? இருபதாம் நூற்றாண்டு
18. கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்? 36 ஆண்டுகள்
19. கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் யார்? தேசிக விநாயகனார்
20. லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலை எழுதியவர் யார்? எட்வின் அர்னால்டு
21. ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்? புத்தர் வரலாறு
22. ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது? லைட் ஆஃப் ஆசியா (Light of Asia)
23. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது? ஆசிய ஜோதி
24. நேர்மையான வாழ்வை வாழ்பவர் யார்? எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
25. ஒருவருக்கு செய்யக் கூடாத செயல் எது? தீவினை
26. 'எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? எளிது + ஆகும்
27. ’பாலையெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? பாலை + எல்லாம்
28. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதுக? இன்னுயிர்
29. மலை + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதுக? மலையெல்லாம்