7th தமிழ் இயல் 4.5 இலக்கியவகைச்-சொற்கள்
1. ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது ----- எனப்படும்? சொல்
2. சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் எவை? மொழி, பதம், கிளவி
3. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்? நான்கு அவை (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)
4. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்? இயற்சொற்கள் எனப்படும்
5. இயற்சொல் எத்தனை வகைகளில் வரும்? நான்கு வகையில் (பெயர், வினை, இடை, உரி)
6. கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள்? திரிசொற்கள் எனப்படும்
7. திரிசொற்கள் எத்தனை வகைகளில் வரும்? நான்கு வகை (பெயர், வினை, இடை உரி)
8. திரிசொற்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு வகை (ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள், பல பொருள் குறித்த ஒரு திரிசொல்)
9. ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்? வங்கம், அம்பி, நாவாய் என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருகிறது
10. பல பொருள்கள் குறித்த ஒரு திரிசொல்? இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் என பல பொருள் தருகிறது
11. வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்? திசைச்சொற்கள் எனப்படும்
12. வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்? வடசொற்கள் எனப்படும்
13. வடசொற்களுக்கு உதாரணம்? வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம்
14. வடசொற்கள் வகைகள் எத்தனை? இரண்டு (தற்சமம், தற்பவம்)
15. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி? சமஸ்கிருதம்
16. கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதை ----- என்பர்? தற்சமம்
17. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்? இயற்சொல்
18. பலபொருள் தரும் ஒருசொல் என்பது? திரிசொல்
19. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி? சமஸ்கிருதம்
20. பொருத்துக
a. இயற்சொல் - 1. பெற்றம்
b. திரிசொல் - 2. இரத்தம்
c. திசைச்சொல் - 3. அழுவம்
d. வடசொல் - 4. சோறு
a - 4, b - 3, c - 1, d - 2