6th தமிழ்-இயல் 1.4 கனவு-பலித்தது
1. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று ஐந்தும் கலந்தது உலகம் என்னும் அறிவியல் உண்மையை கூறும் நூல் எது? தொல்காப்பியம்
2. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆரறிவு வரை வகைப்படுத்தியவர் யார்? தொல்காப்பியர்
3. "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி" என்ற பாடலை இயற்றியவர் யார்? ஒளவையார்
4. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? பதிற்றுப்பத்து
5. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? நற்றிணை
6. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் யார்? கலீலியோ
7. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? தொல்காப்பியம்
8. "கடல்நிர் முகந்த கமஞ்சூழ் எழிலி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? கார்நாற்பது
9. "நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? பதிற்றுப்பத்து
10. "கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? நற்றிணை
11. "திணையளவு போதச் சிறுபுல்நீர் நீண்ட பணையவு காட்டும்" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார்? கபிலர்
12. தமிழ் பயின்ற குடியரசுத் தலைவர் யார்? அப்துல்கலாம்
13. தமிழ் பயின்ற இஸ்ரோ அறிவியல் அறிஞர் யார்? மயில்சாமி அண்ணாதுரை
14. இஸ்ரோவின் தலைவர் யார்? சிவன்