6th தமிழ்-இயல் 5.3 தமிழர்-பெருவிழா
1. இயற்கையோடு இணைந்து வாழ்வதே _____ வாழ்க்கைமுறை ஆகும்? தமிழரின்
2. கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா எவ்விழா? பொங்கல் விழா
3. உழவர்கள் ____ திங்களில் விதைத்து ____ திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர்? ஆடித்திங்கள், தைத்திங்கள்
4. _____ திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர்? தைத்திங்கள்
5. "தமிழர் திருநாள்" என்று போற்றப்படும் விழா எவ்விழா? பொங்கல் விழா
6. "அறுவடைத்திருவிழா" என்று போற்றப்படும் விழா எவ்விழா? பொங்கல் விழா
7. உழவர் திருநாள் என்று போற்றப்படும் விழா எவ்விழா? பொங்கல் விழா
8. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? நன்னூல் நூற்பா 462
9. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் எது? போகித் திருநாள்
10. மார்கழி மாதத்தின் இறுதி நாள் கொண்டாடப்படும் விழா எவ்விழா? போகித் திருநாள்
11. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை ______ விழாவாகக் கொண்டாடப்பட்டது? இந்திரவிழா
12. பொங்கல் என்பதற்குப் ______ என்று பொருள்? பொங்கிப்பெருகி வருவது
13. தை முதல் நாளில் _____ தொடங்குகிறது? திருவள்ளுவராண்டு
14. தை இரண்டாம் நாள் ______ நாளாக கொண்டாடப்படுகிறது? திருவள்ளுவர் நாள்
15. பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டப்படுவது எவ்விழா?மாட்டுப்பொங்கல்
16. மாடு என்ற சொல்லுக்குச் ____ என்னும் பொருளும் உண்டு? செல்வம்
17. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக _____ விளங்குகின்றன? மாடுகள்
18. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது? கி.மு 31
19. மஞ்சுவிரட்டு என்பது என்ன? மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு
20. மஞ்சுவிரட்டுவின் வேறு பெயர் என்ன? மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல்
21. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் விழா எவ்விழா? காணும் பொங்கல்
22. இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழா எது? பொங்கல் விழா
23. அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது? மகரசங்கராந்தி
24. அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் _____ என்று கொண்டாடப்படுகிறது? லோரி
25. அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் _____ என்று கொண்டாடப்படுகிறது? உத்தராயன்
26. கதிர் முற்றியதும் ______ செய்வர்? அறுவடை
27. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _____ கட்டுவர்? தோரணம்
28. பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன? பொங்கலன்று
29. போகிபண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன? போகி + பண்டிகை
30. பழையன கழிதலும் ______ புகுதலும்? புதியன
31. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண ______ தரும்? இன்பம்
32. பட்டுப் போன மரத்தைக் காண _____ தரும்? துன்பம்