8th தமிழ் இயல் 3.2 வருமுன்-காப்போம்

8th தமிழ் இயல் 3.2 வருமுன்-காப்போம்
: :

1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது என்ன? பழமொழி
2. நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே ----- ? அறிவுடைமை
3. ஒரு நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை எது? நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவை
4. "உடலின் உறுதி உடையவரே உலகின் இன்பம் உடையவராம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? கவிமணி தேசிகவிநாயகனார்
5. நித்தம் நித்தம் என்பதன் பொருள் என்ன? நாள்தோறும்
6. மட்டு என்பதன் பொருள் என்ன? அளவு
7. சுண்ட என்பதன் பொருள் என்ன? நன்கு
8. வையகம் என்பதன் பொருள் என்ன? உலகம்
9. பேணுவையேல் என்பதன் பொருள் என்ன? பாதுகாத்தல்
10. திட்டுமுட்டு என்பதன் பொருள் என்ன? தடுமாற்றம்
11. கவிமணி தேசிகவிநாகனார் எங்கு பிறந்தார்? குமரி மாவட்டம் தேரூரில்
12. கவிமணி எனப் போற்றப்படுபவர் யார்? தேசிக விநாயகனார்
13. கவிமணி தேசிகவிநாயகனார் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்? 36ஆண்டுகள்
14. ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை போன்ற நூல்களை எழுதியவர் யார்? கவிமணி தேசிகவிநாயகனார்
15. மலரும் மாலையும் என்னும் நூலை எழுதியவர் யார்? கவிமணி தேசிகவிநாயகனார்
16. உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்தவர் யார்? கவிமணி தேசிகவிநாயகனார்
17. காந்தியடிகள் ----- போற்ற வாழ்ந்தவர்? வையம்
18. "நலமெல்லாம்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? நலம் + எல்லாம்
19. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக? இடமெங்கும்