7th தமிழ் இயல் 7.5 அணி-இலக்கணம்

7th தமிழ் இயல் 7.5 அணி-இலக்கணம்
: :

1. அணி என்னும் சொல்லுக்கு பொருள் என்ன? அழகு
2. ஒரு செய்யுளைச் சொல்லலும் பொருளாலும் அழகு பெறச் செய்தலை ----- என்பர்? அணி
3. "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை "என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? உவமை அணி
4. ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது ----- ஆகும்? உவமை உறுப்பு
5. உவமை உருபுகள் எவை? போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்பு, ஒப்ப, உறழ
6. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? எடுத்துக்காட்டு உவமை அணி
7. உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எது? எடுத்துக்காட்டு உவமை அணி
8. "மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது" என்ற தொடரில் பயின்று வந்த அணி எது? இல்பொருள் உவமை அணி
9. "காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது" என்ற தொடரில் பயின்று வந்த அணி எது? இல்பொருள் உவமை அணி
10. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை ----- என்பர்? இல்பொருள் உவமை அணி
11. civilization ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? நாகரீகம்
12. folklore ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? நாட்டுப்புறவியல்
13. harvest ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?  அறுவடை
14. irrigation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? நீர்ப்பாசனம்
15. foreigner ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?  அயல்நாட்டினர்
16. agriculture ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? வேளாண்மை
17. poet ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? கவிஞர்
18. paddy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? நெற்பயிர்
19. cultivation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? பயிரிடுதல்
20. agronomy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? உழவியல்