8th தமிழ் இயல் 3.3 தமிழர்-மருத்துவம்

8th தமிழ் இயல் 3.3 தமிழர்-மருத்துவம்
: :

1. "மருந்தென வேண்டாவாம் யாக்கை அருந்தியது அற்றது போற்றி உணின்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? திருவள்ளுவர்
2. அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர்கள் யாவர்? நம் தமிழ் மக்கள்
3. உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபுசார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கி பின்பற்றி வந்தவர்கள் யாவர்? தமிழர்கள்
4. தொடக்க காலத்தில் மனிதன் தன் நோயை எவ்வாறு தீர்க்க முயற்சி செய்து இருப்பான்? வேர், பட்டை, இலை, பூ, கனி
5. பழந்தமிழர்கள் அறிந்திருந்த மருத்துவ முறைகள் யாவை? மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம், யோகம்
6. தமிழர்கள் உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்கும் ----- முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்? யோகம்
7. வேர்பாரு, தலைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றவர்கள் யாவர்? சித்தர்கள்
8. தாவரங்கள் மட்டும் அல்லாமல் ----- , ----- சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்திருக்கிறார்கள்? உலோகங்களையும், பாஷாணங்களையும்
9. ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்க்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும், ஆனால் ----- மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை? தமிழர்
10. "நோய்நாடி நோய் முதல்நாடி" என்று கூறிய நூல் எது? திருக்குறள்
11. இன்றைக்கு நோய்கள் பெருகியிருக்க காரணம் என்ன? 
1. மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
2. உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணம்
12. நடைமுறையில் உள்ள மருத்துவ முறைககளை குறிப்பிடுக? சித்த மருத்துவம், ஆயூர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், அலோபதி மருத்துவம்
13. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ----- பயன்படுத்தினர்? தாவரங்களை
14. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ----- நீட்சியாகவே உள்ளது? உணவின்
15. உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்களுள் ஒன்று? இரத்தக்கொதிப்பு
16. சமையலறையில் செலவிடும் நேரம் ----- செலவிடும் நேரமாகும்? நல்வாழ்வுக்காக