7th தமிழ் இயல் 5.5 ஓரெழுத்து-ஒருமொழி-பகுபதம்-பகாப்பதம்

7th தமிழ் இயல் 5.5 ஓரெழுத்து-ஒருமொழி-பகுபதம்-பகாப்பதம்
: :

1. ஓர் எழுத்தோடு பொருள் தரும் சொல்லாக அமைவதை ----- என்பர்? ஓரெழுத்து ஒரு மொழி
2. நன்னுல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்? பவணந்தி முனிவர்
3. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழியின் எண்ணிக்கை? 42
4. ஓரெழுத்து ஒருமொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகள் எத்தனை? 2 (நொ, து)
5. பகுபதமாக அமையும் பெயர்ச்சொல்? பெயர்ப்பகுபதம்
6. பெயர்ப் பகுபதத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம்? 6 வகையாக (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)
7. பகுபதமாக அமையும் வினைச்சொல்? வினைப்பகுபதம்
8. வினைப்பகுபதத்திற்கு எகா? உண்கின்றான் - உண் + கிண்று + ஆன்
9. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? ஆறு (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)
10. பகுபதத்தில் முதலில் அமைந்து கட்டளைப் பொருளில் வருவது? பகுதி
11. பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது? விகுதி
12. பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது? இடைநிலை
13. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து ----- எனப்படும்? சந்தி
14. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் ----- எனப்படும்? சாரியை
15. பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் ----- எனப்படும்? விகாரம்
16. பகுபத உறுப்புகளாக பிரிக்க முடியாத சொல்? பகாப்பதம்
17. பகாப்பதங்கள் எத்தனை வகை? நான்கு வகை (பெயர், வினை, இடை, உரி) எகா பெயர்ப் பகாப்பதம் - நிலம், நீர், நெருப்பு, காற்று வினைப் பகாப்பதம் - நட, வா, படி, வாழ் இடைப் பகாப்பதம் - மன், கொல், தில், போல் உரிப் பகாப்பதம் - உறு, தவ, நனி, கழி
18. நன்னுலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை? 42
19. 'எழுதினான் 'என்பது? வினைப் பகுபதம்
20. பெயர்ப்பகுபதம் ----- வகைப்படும்? ஆறு
21. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு? இடைநிலை
22. பொருத்துக 
a. பெயர்ப் பகுபதம் - வாழ்ந்தான் 
b. வினைப் பகுபதம் - மன் 
c. இடைப் பகாப்பதம் - நனி 
d. உரிப் பகாப்பதம் - பெரியார்
a - 4, b - 1, c - 2, d - 3
23. இடம் எத்தனை வகைப்படும்? மூன்று (தன்மை, முன்னிலை, படர்கை)
24. தன்னைக் குறிப்பது? தன்மை எகா நான், நாங்கள், என், எம்
25. முன்னால் இருப்பவரைக் குறிப்பது? முன்னிலை எகா நீ, நீர், உன்
26. தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது? படர்க்கை