8th தமிழ் இயல் 8.5 யாப்பு-இலக்கணம்

8th தமிழ் இயல் 8.5 யாப்பு-இலக்கணம்
: :

1. குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை ----- என்பர்? மரபுக்கவிதை
2. இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதை? புதுக்கவிதை
3. மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் ----- எனப்படும்? யாப்பு இலக்கணம்
4. யாப்பு இலக்கனத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்? ஆறு (எழுத்து, அசை, சீர், அடி தொடை)
5. யாப்பிலக்கணத்தின் எழுத்துக்களை ----- ஆக பிரிப்பர்? மூன்றாக
6. எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது? அசை
7. அசை எத்தனை வகைப்படும்? இரண்டு (நேரசை, நிரையசை)
8. குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் அது? நேரசையாகும்
9. இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஓற்றெலுத்து சேர்ந்து வந்தாலும் அது? நிறையசையாகும்
10. ஓர் ஆசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது? சீர்
11. சீர் எத்தனை வகைப்படும்? நான்கு வகைப்படும் (ஓரசைச்சிர், ஈரசைச்சிர், மூவசைசச்சிர், நாலசைச்சிர்)
12. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை ----- என்பர்? தளை
13. தலைகள் எத்தனை வகைப்படும்? ஏழு வகை
14. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது? அடி எனப்படும்
15. அடி எத்தனை வகைப்படும்? ஐந்து வகை
16. செய்யுளில் ஓசையின்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே ----- ஆகும்? தொடை
17. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது? மோனை
18. இரண்டாம் எழுத்து ஒன்றிவர தொடுப்பது? எதுகை
19. இறுதி எழுத்து இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது? இயைபு
20. ஒரு பாடலின் இறுதிச்சிர் அல்லது அடியின் இறுதிபகுதி அடுத்த பாடலின் முதல்சிர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது? அந்தாதி தொடை
21. பா எத்தனை வகைப்படும்? நான்கு வகை (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வன்சிப்பா)
22. செப்பல் ஓசை உடையது? வெண்பா
23. அறநூல்கள் பலவும் ----- அமைந்தவை? வெண்பாவால்
24. அகவல் ஓசை உடையது? ஆசிரியப்பா
25. சங்க இலக்கியங்கள் பலவும் ----- அமைந்தவை? ஆசிரியப்பா
26. துள்ளல் ஓசை உடையது? கலிப்பா
27. கலிப்பாவால் ஆனது? கலித்தொகை
28. தூங்கள் ஓசை உடையது? வான்சிப்பா
29. அசை ----- வகைப்படும்? இரண்டு
30. விடும் என்பது ----- சீர்? நிரையசை
31. அடி ----- வகைப்படும்? ஐந்து
32. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது? மோனை
33. charity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? தொண்டு
34. saint ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? ஞானி
35. philosophy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? தத்துவம்
36. integrity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? நேர்மை
37. rational ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? பகுத்தறிவு
38. reform ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? சீர்திருத்தம்