WORLD'S LARGEST CAR THEFT - உலகின் மிகப்பெரிய கார் திருட்டு

Car theft by government, volvo cars,volvo 144 stolen,north korea volvo 1974 agreement,north korea oprression,north korea car heist,kim jong un,biggest car heist

WORLD'S LARGEST CAR THEFT - உலகின் மிகப்பெரிய கார் திருட்டு

வணக்கங்க!!!.

இன்னைக்கு நாம பாக்க போறது உலகின் மிகப் பெரிய கார் திருட்டு பாத்தி தான். இது நடந்தது 1974ல. யாரு திருடனுதான கேக்கிறிங்க? சொல்றேன். நம்ம கிம் ஜாங் உன்னோட வட கொரியா தான்.

1974 ஆம் ஆண்டு சுவிடன் அரசாங்கமும் வட கொரிய அரசாங்கமும் ஒரு ஒப்பந்தம் செஞ்சிக்கினாங்க. அது என்னன்ன, சுவிடன் அரசாங்கம் ஒரு 1000 வால்வோ செடன் கார்களை தயாரிச்சி வட கொரியாவுக்கு குடுக்கனும். (டாக்சியா பயன்படுத்திக்க தான்) அதுக்கு வட கொரியா சுமார் 7 கோடி அமெரிக்க டாலர் குடுக்கனும்.

சரி இந்த உடன்படிக்கையை போட்டது யாருன்னா அன்றைய வட கொரியா அதிபர் கிம் இல் சுங் அதாங்க இன்றைய வட கொரிய அதிபர் நம்ம கிம் ஜாங் உன்னோட தாத்தா தான்.

ஒப்பந்தப்படி சுவிடன் அரசாங்கம் 1000 கார்களை தயாரிச்சி கப்பல்ல ஏத்தி வட கொரியாவுக்கு அனுப்பிச்சிட்டு யாம்பா கிம் இல் சுங் காரை அனுப்பியாச்சி நீ பணத்தை  எப்ப அனுப்புரன்னு கேட்டாங்க.

ஆனா வட கொரியாகிட்ட இருந்து பதிலே வரல. சரி பணத்தை இப்ப அனுப்புவான் அப்ப அனுப்புவான்னு காத்திருந்து காத்திருந்து 49 வருஷம் ஆச்சு. ஆனா பணம் மட்டும் வந்தபாடு இல்ல.

இன்னைக்கு வரைக்கும் வருஷத்துக்கு ரெண்டு வாட்டி பில்ல அனுப்பி பணம் கொடுன்னு சுவிடன் அரசாங்கம் கேட்டுக்னே இருக்கு.

ஆனா பில்ல வாங்கி பத்திரமா வைச்சிக்கிட்டு பணத்தை மட்டும் கொடுக்கவே இல்ல வட கொரியா. இன்னக்கி தேதிக்கு வட்டியும் முதலுமா சுமார் 22000 கோடி ரூபாய் வருதாம். (?????)

பன்னாட்டு வணிகத்தில் உள்ள சிக்கல்களையும் சவால்களையும் இடர்களையும் இந்நிகழ்வு நமக்கு தெரியப்படுத்துகிறது.

 குறிப்பு

ஒரு சில அறிக்கைகள் என்ன சொல்லுதுன்னா வட கொரியா சுவிடனுக்கு பணமா கொடுக்கல அதுக்கு பதிலா ஒப்பந்தப்படி நிலக்கரி, கனிம வளங்கள், காப்பர், ஜிங்க் மற்றும் தங்கம்ன்னு கொடுத்துடுச்சினு சொல்றாங்க. நமக்கு எது உண்மைன்னு அவங்க இரண்டு பேரும் சொன்னாதான் தெரியும்.

ARTICLE LINK