7th தமிழ் இயல் 8.3 ஒப்புரவு நெறி

7th தமிழ் இயல் 8.3 ஒப்புரவு நெறி
: :

1. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது? திருக்குறள்
2. ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடமை நெறியே ----- வாழும் நெறி? திருவள்ளுவர் நெறி
3. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும்" இம்முறையை எடுத்துக் கூறியவர் யார்? அப்பரடிகள்
4. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் "என்பதை வழிமொழிந்தவர் யார்? காந்தியடிகள்
5. "உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர் யார்? பாவேந்தர் பாரதிதாசன்
6. "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? புறநானுறு
7. ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது எது? உழைப்பு
8. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்? தவத்திரு குன்றக்குடி அடிகளார்
9. குன்றக்குடி அடிகளார் எந்த திருமடத்தின் தலைவராக விளங்கினார்?  குன்றக்குடி
10. திருக்குறள் நெறியை பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் யார்? குன்றக்குடி அடிகளார்
11. நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்கள் இயற்றியவர் யார்? குன்றக்குடி அடிகளார்
12. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதல்கள் எவை? அருளோசை, அறிக அறிவியல்
13. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது ----- நெறி? பொதுவுடமை
14. செல்வத்தின் பயன் ----- வாழ்வு? ஒப்புரவு
15. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ----- என்றும் கூறுவர்? மருந்து
16. "உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர்? பாரதிதாசன்
17. எளிது என்ற சொல்லின் எதிர் சொல் என்ன? அரிது
18. ஈதல் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன? ஏற்றல்
19. அந்நியர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன? உறவினர்
20. இரவலர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன? புரவலர்