6th தமிழ்-இயல் 9.3 அணி-இலக்கணம்
1. அணி என்பதற்கு ----- என்பது பொருள்? அழகு
2. கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது எது? அணி
3. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது எது? அணி
4. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது ----- அணி ஆகும்? இயல்பு நவிற்சி அணி
5. இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர் என்ன? தன்மை நவிற்சி அணி "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" எனும் பாடலில் பயின்று வந்துள்ள அணியை கூறுக?
6. "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" எனும் பாடலை இயற்றியவர் யார்? கவிமணி தேசிக விநாயகனார்
7. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது ----- அணி ஆகும்? உயர்வு நவிற்சி அணி
8. "ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா" எனும் பாடலில் பயின்று வந்துள்ள அணியை கூறுக? உயர்வு நவிற்சி அணி
9. Humanity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? மனிதநேயம்
10. Mercy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? கருணை
11. Transplantation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
12. Nobel Prize ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? நோபல் பரிசு
13. Lorry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? சரக்குந்து