8th தமிழ் இயல் 7.3 பாரத-ரத்னா-எம்.ஜி.இராமச்சந்திரன்
1. யார் காலத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது? காமராஜர்
2. மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டம் என அழைத்து விரிவுபடுத்தியவர் யார்? எம். ஜி. ஆர்
3. புரட்சித்தலைவர் என அலைவராலும் அழைக்கப்படுபவர் யார்? எம். ஜி. ஆர்
4. பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் எம். ஜி. ஆர் எதில் சேர்ந்தார்? நாடகக்குழு
5. எம். ஜி. ஆரை மக்கள் எவ்வாறெல்லாம் போற்றினர்? புரட்சித்தலைவர், மக்கள் திலகம்
6. சிறந்த நடிகருக்கான என்ன பட்டத்தை எம். ஜி. ஆர் பெற்றார்? பாரத் பட்டம்
7. எம். ஜி. ஆரின் குடும்பம் எந்த மாநிலத்தை சேர்ந்தது? கேரளா
8. எம். ஜி. ஆரின் குடும்பம் கேரளாவில் இருந்து எங்கு சென்றனர்? இலங்கையில் உள்ள கண்டி
9. எம். ஜி. ஆர் எந்த ஆண்டு எங்கு பிறந்தார்? 1917ஜனவரி - 17நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்
10. எம். ஜி. ஆரின் பெற்றோர் யார்? கோபாலன் - சத்யபாமா
11. எம். ஜி. ஆர் எத்தனையாவது மகனாக பிறந்தார்? ஐந்தாவது
12. எம். ஜி. ஆரின் தயார் குழந்தைகளுடன் எங்கு வந்து குடியேறினார்? தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்
13. "பதவி வரும்போது பணிவு வர வேண்டும்"என்ற வரிகேற்ப வாழ்ந்தவர் யார்? எம். ஜி. ஆர்
14. பள்ளிக் குழந்தைகளுக்கு காலனி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? எம். ஜி. ஆர்
15. எம். ஜி. ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது? சென்னை பல்கலைக்கழகம்
16. தமிழக அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் சூட்டியது? எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்
17. எம். ஜி. ஆருக்கு பாரத ரத்னா (இந்திய மாமணி) விருது எந்த ஆண்டு வழங்கியது? 1988
18. பொன்மனச் செம்மல் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்? எம். ஜி. ஆர்
19. எம். ஜி. ஆர் வழங்கிய சமூகநலத்திட்டங்கள் எவை? உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம், ஆதரவற்ற மகளிருக்கும் திருமண உதவித்திட்டம், தாய்சேய் நல இல்லங்கள், பற்பொடி வழங்கும் திட்டம், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடநூல் வழங்கும் திட்டம், முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
20. பெரியாரின் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தத்தை சிலவற்றை நடைமுறைப்படுத்தியவர் யார்? எம், ஜி. ஆர்
21. எம். ஜி. ஆர் நடத்திய உலகத் தமிழ் மாநாடு எது? ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு
22. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது? மதுரை
23. எம். ஜி. ஆர் எங்கு தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார்? தஞசை
24. எம். ஜி. ஆர் நூற்றாண்டு விழாவில் (1917 - 2018) தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்ட பேருந்து நிலையங்கள் எவை? சென்னை மற்றும் மதுரை
25. இந்திய அரசு எந்த ரயில் நிலையத்திற்கு புரடசித்தலைவர் எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்தது? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
26. எம். ஜி. ஆர் ----- என்னும் ஊரில் கல்வி பயின்றார்? கும்பகோணம்
27. எம். ஜி. ஆர் படிப்பை தொடர முடியாமைக்கு காரணம்? குடும்ப வறுமை
28. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ----- எனும் பட்டத்தை எம். ஜி. ஆருக்கு வழங்கியது? பாரத்
29. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்? மதுரை
30. எம். ஜி. ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம்? மதிய உணவுத்திட்டம்