7th தமிழ் இயல் 6.5 தொழிற்பெயர்

7th தமிழ் இயல் 6.5 தொழிற்பெயர்
: :

1. ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது? தொழிற்பெயர்
2. தொழிற்பெயர் எதைக் காட்டாது? எண், இடம், காலம், பால்
3. தொழிற்பெயர் எந்த இடத்தில் வரும்? படர்க்கை
4. தொழிற்பெயர்க்கு எடுத்துக்காட்டு? படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல், பொறுத்தல்
5. தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்? மூன்று (விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலை தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர்)
6. வினைப் பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது? விகுதி பெற்ற தொழிற்பெயர்
7. தொழிற்பெயர் விகுதிகள் எவை? தல், அல், அம், ஐ, கு, பு, வு, தி, சி, வி, மை
8. விகுதி பெற்ற தொழிற்பெயருக்கு எகா? நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை
9. முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது? முதனிலை தொழிற்பெயர்
10. முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர்? முதனிலை திரிந்த தொழிற்பெயர்
11. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது? படித்தல்
12. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்து தொழிற்பெயர் எது? ஊறு
13. ஒட்டம் என்பதன் தொழிற்பெயர்? விகுதி பெற்ற தொழிற்பெயர்
14. பிடி என்பதன் தொழிற்பெயர்? முதனிலைத் தொழிற்பெயர்
15. சூடு என்பதன் தொழிற்பெயர்? முதனிலை திரிந்த தொழிற்பெயர்
16. creator என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? படைப்பாளர்
17. sculpture என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? சிற்பம்
18. artist என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? கலைஞர்
19. inscriptions என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? கல்வெட்டு
20. manuscripts என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? கையெழுத்துப்படி
21. aesthetics என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? அழகியல்
22. brush என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? தூரிகை
23. cartoon என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
 கருத்துப்படம்
24. cave painting என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? குகை ஓவியங்கள்
25. modern art என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? நவீன ஓவியம்