7th தமிழ் இயல் 1.3 பேச்சுமொழியும்-எழுத்துமொழியும்

7th தமிழ் இயல் 1.3 பேச்சுமொழியும்-எழுத்துமொழியும்
: :

1. தமது எண்ணங்களையும் உணர்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே ----- ஆகும்? மொழி
2. மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறது? மொழியின் மூலமாக
3. வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது? பேச்சுமொழியாகும்
4. பேசுவதும், கேட்பதும் மொழியின் ----- நிலையாகும்? முதல்நிலை
5. எழுதப்படுவதும், பாடிக்கப்படுவதும் மொழியின் ----- நிலை ஆகும்? இரண்டாம் நிலை
6. உடனடிப் பயன்பாட்டிற்கு உதவுவது எது? ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழி
7. நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரிய மொழி எது? எழுத்து மொழி
8. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது? பேச்சுமொழி
9. 'எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் ' எனக் கூரியவர்? மு. வரதராசனார்
10. "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? நன்நூல்
11. பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ----- என்பர்? வட்டார மொழி
12. வட்டார மொழிக்கு எகா? இருக்கிறது என்னும் சொல் 'இருக்கு', 'இருக்குது ', 'கீது '
13. தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் எவை? கன்னடம், தெலுங்கு
14. பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே ----- மொழியாகும்? எழுத்து மொழியாகும்
15. பேச்சுமொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்? உலகவழக்கு
16. எழுத்து மொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்? இலக்கிய வழக்கு
17. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது? இறட்டை வழக்கு மொழி
18. தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியவர் யார்? தொல்காப்பியர்
19. 'நல்லாச் சாப்ட்டான்' என்பது? பேச்சுமொழி (உலக வழக்கு)
20. 'நன்றாகச் சாப்பிட்டான்' என்பது? எழுத்து மொழி (இலக்கிய வழக்கு)
21. எந்த மொழியில் குரல் ஏற்ற தாழ்வு, உடல் மொழி போன்றவற்றிக்கு இடமில்லை? எழுத்து மொழி
22. எந்த மொழியில் சிந்திப்பதற்கான நேரம் மற்றும் திருத்திக் கொள்ள வாய்ப்பில்லை? பேச்சு மொழி
23. குழந்தைக்கு தாய் மொழி எவ்வாறு அறிமுகமாகிறது? கேட்டல், பேசுதல்
24. குழந்தைக்கு பிறமொழிகள் எவ்வாறு அறிமுகமாகிறது? படித்தல், எழுதுதல்
25. தமிழை ----- மொழி என்பர்? இறட்டை வழக்கு மொழி
26. "எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? பாவேந்தர்
27. "செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுஉம் வேண்டும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? பாவேந்தர்
28. மொழியின் முதல் நிலை பேசுதல் ----- ஆகியவனாகும்? கேட்டல்
29. ஒலியின் வரிவடிவம் ----- ஆகும்? எழுத்து
30. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று? தெலுங்கு
31. பேச்சுமொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்? உலக