7th தமிழ் இயல் 4.4 ஆழ்கடலின்-அடியில்

1. ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில் கப்பல் மாலுமிகளிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவிய ஆண்டு எது? 1886
2. ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் கப்பல்களை உலோகத்தால் ஆன உடலைக் கொண்டு ஒரு விந்தையான விலங்கு தாக்குகிறது. அந்த விந்தை விலங்கை கண்டுபிடித்து அழிப்பதற்கு போர்க்கப்பல் அனுப்பிய நாடு எது? அமெரிக்கா
3. ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட போர்க்கப்பலின் தலைவர் யார்? ஃபராகட்
4. அறிவியல் புனைகதைகளில் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்? ஜீல்ஸ் வெர்ன்
5. ஜீல்ஸ் வெர்ன் எந்த நாட்டை சேர்ந்தவர்? பிரான்ஸ்
6. பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் என்ற புதினத்தை எழுதியவர் யார்? ஜீல்ஸ் வெர்ன்
7. எண்பது நாளில் உலகத்தை சுற்றி என்ற புதினத்தை எழுதியவர் யார்? ஜீல்ஸ் வெர்ன்
8. ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தை எழுதியவர் யார்? ஜீல்ஸ் வெர்ன்