8th தமிழ் இயல் 8.4 மனித-யந்திரம்
1. ஒரே மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள் புதைந்துகிடக்கும் என்கிறவார்கள் யார்? உளவியல் அறிஞர்கள்
2. ஒரு மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள் யாவை? நல்லதையே நினைப்பது, கெட்டதையே நினைப்பது
3. மீனாட்சி சுந்தரம் என்ன வேலை செய்துவந்தார்? ஸ்டோர் குமாஸ்தா
4. மீனாட்சி சுந்தரம் எந்த வகையான கணக்குகளை புண்ணை எண்ணெய் குத்து விளக்கில் தீர்த்து வைப்பார்? வரவு செலவு கணக்குகளை
5. மீனாட்சி சுந்தரத்தை பார்த்தல் மற்றவர்களுக்கு என்ன நினைப்பு வரும்? ஒரு பழுது படாத இயந்திரம்
6. மீனாட்சி சுந்தரத்தின் ஆசை? ஒரு மளிகை கடை வைக்கவேண்டும் கொழும்பு சென்று பணம் சம்பாதித்து வர வேண்டும்
7. அக்காலத்தில் இருந்து அளவைப் பெயர்கள்? மாகாணி, வீசும்
8. அக்காலத்தில் இருந்து நாணயப் பெயர்கள் யாவை? அணா, சல்லி, துட்டு
9. ஒரு ருபாய் எத்தனை அனாக்களை கொண்டது? 16
10. சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்? புதுமைப்பித்தன்
11. புதுமைப்பித்தனின் இயற்பெயர்? சொ. விருத்தாசலம்
12. சிறுகதைகளில் புதுப்புது உத்திகளை கையாண்டவர் யார்? புதுமைப்பித்தன்
13. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம் ஒருநாள் கழிந்தது போன்ற சிறுகதைகளை எழுதியவர்? புதுமைப்பித்தன்
14. மனித யந்திரம் சிறுகதை எந்த இதழில் வெளியானது? மணிக்கொடி