8th தமிழ் இயல் 4.2 புத்தியைத்-தீட்டு
1. அறிவே ஆற்றல் என்பது? ஆன்றோர் கூற்று
2. எது ஒரு மனிதரை உயரச் செய்யும்? அறிவும், உழைப்பும்
3. "கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? ஆலங்குடி சோமு
4. "ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? ஆலங்குடி சோமு
5. "மன்னிக்கத் தெரிந்த மனிதன் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? ஆலங்குடி சோமு
6. "இங்கே இருப்பது சில காலம் இதற்குள் எனோ அகம்பாவம் இதனால் உண்டோ ஒரு லாபம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? ஆலங்குடி சோமு
7. தடம் என்பதன் பொருள் என்ன? அடையாளம்
8. அகம்பாவம் என்பதன் பொருள் என்ன? செருக்கு
9. சோமு எங்கு பிறந்தார்? சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குடி
10. ஆலங்குடி சோமு எந்த துறையில் புகழ்பெற்றவர்? திரைப்படப் பாடலாசிரியர்
11. ஆலங்குடி சோமு பெற்ற விருது எது? தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
12. என் நண்பர் பெரும் புலவராக இருத்தபோது ----- இன்றி வாழ்ந்தார்? அகம்பாவம்
13. "கோயிலப்பா"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? கோயில் + அப்பா
14. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? பகைவென்றாலும்