உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

Q1: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். எலியும் பூனையும் போல – உவமை கூறும் பொருள் கூறுக: 
(அ) ஒற்றுமை
(ஆ) வேற்றுமை
(இ) ஏமாற்றம்
(ஈ) நட்பு

Q2: “இலவு காத்த கிளி போல” என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்? 
(அ) ஏமாற்றம்
(ஆ) தோல்வி
(இ) காவல்
(ஈ) நன்மை

Q3: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “பசுமரத்தாணி போல” 
(அ) பயனற்ற செயல்
(ஆ) எளிதில் மனத்தில் பதிதல்
(இ) எதிர்பாரா நிகழ்வு
(ஈ) தற்செயல் நிகழ்வு

Q4: “மழை காணாப் பயிர்போல” – உவமை கூறும் பொருள் தெளிக: 
(அ) சோகம்
(ஆ) அழுகை
(இ) உவகை
(ஈ) சிரிப்பு

Q5: ”குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” – உவமை கூறும் பொருள் தெளிக: 
(அ) பயம்
(ஆ) பாதுகாப்பு
(இ) மலை
(ஈ) சண்டை

Q6: உவமைகளால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “விழலுக்கு இறைத்த நீர் போல” – உவமை கூறும் பொருளைக் கூறுக 
(அ) எதிர்பாரா நிகழ்வு
(ஆ) பயனற்ற செயல்
(இ) தற்செயல் நிகழ்வு
(ஈ) வெளிப்படைத் தன்மை

Q7: விழலுக்கு இறைத்த நீர் போல இவ்வுவமை விளக்கும் பொருள் யாது ?
A) பயனுள்ள செயல்
B) பயனற்ற செயல்
C) எதிர்பாரா செயல்
D) எதிர்பார்த்த செயல்

Q8: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல் – மடை திறந்த வெள்ளம் போல 
A) வெளிப்படைத் தன்மையாக
B) தெள்ளத் தெளிவாக
C) தடையின்றி மிகுதியாய்
D) எளிதில் மனதில் பதிதல்

Q9: உவமைகளால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “விழலுக்கு இறைத்த நீர் போல” – உவமை கூறும் பொருளைக் கூறுக
(அ) எதிர்பாரா நிகழ்வு
(ஆ) பயனற்ற செயல்
(இ) தற்செயல் நிகழ்வு
(ஈ) வெளிப்படைத் தன்மை

Q10: உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக – உள்ளங்கை நெல்லிக்கனி போல 
A) வெளிப்படைத் தன்மை
B) வெளிப்படையற்ற தன்மை
C) மறைத்து வைத்தல்
D) தன்னலமின்மை

Q11: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க: கண்ணை இமை காப்பது போல 
(அ) ஒற்றுமை
(ஆ) வேற்றுமை
(இ) பாதுகாப்பு
(ஈ) ஏமாற்றம்

Q12: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். “கீரியும் பாம்பும் போல” – உவமை கூறும் பொருள் தெளிக. 
(அ) பகைமை
(ஆ) நட்பு
(ஈ) ஒற்றுமை
(ஈ) வேற்றுமை

Q13: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “நகமும் சதையும் போல” – உவமை கூறும் பொருளை எழுதுக. 
(அ) வேற்றுமை
(ஆ) நட்பு
(இ) ஏமாற்றம்
(ஈ) ஒற்றுமை

Q14: உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல 
(அ) ஒற்றுமை
(ஆ) நட்பு
(இ) ஒற்றுமையின்மை
(ஈ) பகைமை

Q15: உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: “மழைமுகம் காணாப்பயிர் போல” 
(அ) ஏக்கம்
(ஆ) இரக்கம்
(இ) நட்பு
(ஈ) பகைமை

Q16: வஞ்சகன் முதலைக் கண்ணீர் வடித்தான் – இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது? 
(அ) மெய்யழுகை-உண்மையான அழுகை
(ஆ) எண்ணித் துணியாதார்-நல்லவன் வடிக்கும் கண்ணீர்
(இ) பொய்யழுகை, பொய்யான நட்பு, தீமை தரக்கூடிய கண்ணீர்
(ஈ) பொய்யில்லாத அழுகை

Q17: கீழ்க்கண்ட உவமைக்கு பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க: “உடலும் உயிரும் போல”
(அ) ஒற்றுமையின்மை
(ஆ) மகிழ்ச்சி
(இ) வெளிப்படைத்தன்மை
(ஈ) ஒற்றுமை

Q18: உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 
“தாமரை இலை நீர்போல”
(அ) ஏமாற்றம்
(ஆ) பற்றுதல் இன்றி
(இ) ஏற்றம்
(ஈ) இரக்கம்

Q19: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் 
கல்லில் நார் உரித்தல்
(அ) நீண்டகாலமாக இருப்பது
(ஆ) ஆராய்ந்து பாராமல்
(இ) இயலாத செயல்
(ஈ) விரைந்து வெளியேறுதல்

Q20: தவறான உவமை இணையைத் தேர்ந்தெடுக்க: 
(அ) பசுமரத்தாணிபோல – எளிதில் மனத்தில் பதிதல்
(ஆ) மடைதிறந்த வெள்ளம்போல – தடையின்று
(இ) கீரியும் பாம்பும் போல – ஒற்றுமை
(ஈ) விழலுக்கு இறைத்த நீர்போல – பயனற்றசெயல்

Q21: “உள்ளங்கை நெல்லிக்கனி போல” – உவமை கூறும் பொருள் தெளிக: 
(அ) தெளிவாக
(ஆ) சிறப்பாக
(இ) நன்றாக
(ஈ) வெளிப்படைத் தன்மையாக

Q22: எலியும் பூனையும் போல' உவமை கூறும் பொருளை எழுதுக
(A) பகைமை
(B) ஒற்றுமை
(C) நட்பு
(D) வேற்றுமை

Q23: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல். மழைமுகம் காணாப் பயிர் போல 
(A) மழை பொழியாத நிலை.
(B) மழையின் முகம் பயிரின் வருத்தம்
(C) நீண்ட நாள் காணாமல் ஏங்குவது
(D) வருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த நிலை

Q24: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் - விழலுக்கு இறைத்த நீர் போல 
(A) பயனுள்ள செயல்
(B) பயனற்ற செயல்
(C) மிகுதியான செயல்
(D) தகுதியான செயல்

Q25: "நகமும் சதையும் போல” - உவமை கூறும் பொருள் தெளிக
(A) வேற்றுமை
(B) ஒற்றுமை
(C) பகைமை
(D) நட்பு

Q26: தீயொழுக்கம் கானல்நீர் போன்றது பொருத்தமான பொருள் யாது? 
(A) மகிழ்ச்சியைத் தருவது
(B) இருப்பது போல் தோன்றும் ஆனால் இராதது
(C) துன்பத்தைக் கொடுப்பது
(D) இன்பம், துன்பம் உடையது

Q27: உவமைத் தொடரின் பொருத்தமான பொருளைத் தேர்ந்து எழுதுக. 'அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு மடை திறந்த வெள்ளம் போல அமைந்துள்ளது' 
(A) தெளிவற்ற பேச்சு
(B) குழப்பமான பேச்சு
(C) தெளிவான, சீரான பேச்சு
(D) கலக்கம் நிறைந்த பேச்சு