10th தமிழ் இயல் 2.1 கேட்கிறதா-என்குரல்
தனிநாயக அடிகள், புறநானுறு, இளங்கோவடிகள், திருமந்திரம், தொல்காப்பியர்

1. உயிரினங்களின் முதன்மை தேவை எது? மூச்சுக்கு காற்று, தாகத்திற்கு நீர், உறைவதற்கு நிலம், ஒளிக்கும் கதிரவன்
2. உயிர்களின் உயிர் மூச்சு எது? காற்று
3. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்? தொல்காப்பியர்
4. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என்று கூறியவர் யார்? திருமூலர்
5. திருமூலர் இயற்றிய நூல் எது? திருமந்திரம்
6. "வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம்" என்று கூறியவர் யார்? ஒளவையார்
7. காற்றின் வேறு பெயர்கள் யாவை? காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி
8. பருவநிலை, சூழல், வீசும், வேகத்தைப் பொருத்து காற்றின் பெயர்கள் யாவை? தென்றல்காற்று, பூங்காற்று, கடல்காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, மென்காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, பேய்க்காற்று, சூறாவளிக்காற்று, சுழல்காற்று
9. கிழக்கு என்பதற்கு பொருள் என்ன? குணக்கு
10. கிழக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? கொண்டல்
11. மழைக்காற்று என அழைக்கப்படுவது? கொண்டல்காற்று
12. மேற்கு என்பதன் பொருள் என்ன? குடக்கு
13. மேற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? கோடை
14. வெப்பக் காற்று என்று அழைக்கப்படுவது? கோடைக்காற்று
15. வடக்கு என்பதன் பொருள் என்ன? வாடை
16. வடக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? வாடைக்காற்று
17. ஊதைக் காற்று என்று அழைக்கப்படுவது? வாடைக்காற்று
18. தெற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? தென்றல் காற்று
19. இதமான காற்று என்று அழைக்கப்படுவது? தென்றல் காற்று
20. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்று கூறியவர் யார்? இளங்கோவடிகள்
21. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? சிலப்பதிகாரம்
22. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலை இயற்றியவர் யார்? பலபட்டடைச் சொக்கநாதர்
23. "நந்தமிலும் தன்பொருநை நன்னதியும் சேர் பொறுப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" தூது செல்ல காற்றை அழைக்கிறாள் என கூறியவர்? பலபட்டடைச் சொக்கநாதர்
24. தூது செல்ல காற்றை பெண் ஒருத்து அழைத்ததாக எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
25. கி. பி. முதல் நூற்றாண்டில் முசிறித் துறைமுகத்தை விரைவில் அடைய புதிய வழியைக் கண்டு பிடித்தவர் யார்? ஹிப்பாலஸ்
26. 'ஹிப்பாலஸ் பருவக்காற்று ' என பெயர் சூட்டியவர்கள் யார்? யவனர்கள்
27. "நளிஇரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக" என்ற வரியில் காற்றை சிறப்பித்தவர் யார்? வெண்ணிக்குயத்தியார்
28. "நளிஇரு முந்நீர் நாவை ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக" என்ற வரி இடம்பெற்ற நூல்? புறநானுறு
29. "நளிஇரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக" என்ற புறநானுறு பாடலில் வெண்ணிக்குயத்தியார் எம்மண்ணை புகழ்ந்து பாடியுள்ளார்? கரிகால் பெருவளத்தான்
30. சங்ககால பெண் புலவர் வெண்ணியக்குயத்தியார் 'வளி ' எனக் குறிப்பிட்டு சிறப்பு செய்திருப்பது எதை? காற்று
31. பருவக்காற்றின் பயனை உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார்? கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ்
32. தென்மேற்கு பருவக் காற்றின் காலம் என்ன? ஜூன் முதல் செப்டம்பர் வரை
33. வடகிழக்கு பருவ காற்றின் காலம் என்ன? அக்டோபர் முதல் டிசம்பர் வரை
34. இந்தியாவின் முதுகெலும்பு? வேளாண்மை
35. இந்தியாவிற்குத் தேவையான 70% மழையை எந்தக் காற்று தருகிறது? தென்மேற்கு பருவக் காற்று
36. காற்று எந்தப்பருவ கால காற்றில் புயலாகமாறுகிறது? வடகிழக்கு பருவக்காற்று
37. "வளி மிகின் வலி இல்லை" என்று கூறியவர் யார்? ஐயூர் முடவனார்
38. "கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது" என்று கூறியவர் யார்? மதுரை இளநாகனார்
39. புவியில் உயிர்ச் சங்கிலித்தொடர் அறுபடாதிருக்க உதவுவது? காற்று
40. உலக காற்றாலை உற்பத்தியில் இந்தியாவின் இடம்? 5ம் இடம்
41. இந்திய காற்றாலை உற்பத்தியில் தமிழகத்தின் இடம்? முதல் இடம்
42. உலகிலேயே அதிகளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவின் பங்கு? 2ம் இடம்
43. உயிர்வளியை உடையது எது? அக்சிஜன்
44. tyres என்பது? மெது உருளைகள்
45. காற்று மாசுபடுவதால் என்ன நோய் ஏற்படுகிறது? கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய் இளைப்பு நோய்
46. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது எது? காற்று மாசுபாடு
47. காற்று மாசுபடுவதல் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக எந்த நிறுவனம் கூறுகிறது? ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF)
48. கதிரவனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் அரணாக விளங்குவது எது? ஓசோன் படலம்
49. குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது? குளோரோ புளோரா கார்பன்
50. எந்த வாயு ஓசோன் படலத்தை ஓட்டையிடுகிறது? குளோரோ புளோரோ கார்பன்
51. ஓசோன் வாயு பாதிப்பால் ஏற்படும் தீமைகள்? ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ள அனைத்து உயிர்களும் துன்பம் அடைகின்றன. கண்களும் தோலும் பாதிப்படைகின்றன
52. தற்போது குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு எது? ஹைட்ரோ கார்பன் (HC)
53. அமிலமழை பொழிவால் ஏற்படும் தீமைகள்? மண், நீர், கட்டங்கள், நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவை துன்பத்துக்குள்ளாகின்றன
54. உலக காற்று தினம் கொண்டாடப்படும் நாள்? ஜூன் 15 - ஆம் நாள்
55. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு ----- ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்? ஒரு இலட்சம்
56. பின் வருத்தங்கள் என்ற தலைப்பில் காற்றை பாடாமல் விட்டதற்கு வருந்தும் கவிஞர் யார்? தேவகோட்டை வா. மூர்த்தி
57. "மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம் வருடி" என்ற பாடலை இயற்றியவர் யார்? தேவகோட்டை வா. மூர்த்தி
58. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் பாடல்கள் யாவை? திருவெம்பாவை, திருப்பாவை (அவர்கள் தாய்மொழியில் எழுதிவைத்து பாடுகின்றனர்)
59. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடப்படுகின்றன என கூறியவர்? தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்)
60. எந்த நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்கு கற்களால் தாஜ்மகால் கட்டப்பட்டது? 17 - ம் நூற்றாண்டு