10th தமிழ் இயல் 2.3 முல்லைப்பாட்டு

10th தமிழ் இயல் 2.3 முல்லைப்பாட்டு
: :

1. முல்லைப்பாட்டை படைத்தவர் யார்? நப்பூதனார் (காவிரிப்பூம்பட்டினம் பொன்வணிகனார் மகன்)
2. "சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல், நோக்கி ஆய்மகள்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? முல்லைப்பாட்டு
3. "நன்னர் நன்மொழி கேட்டனம் " - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? முல்லைப்பாட்டு
4. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது? 103
5. முல்லைப்பாட்டு எதனால் இயற்றப்பட்டது? ஆசிரியப்பா
6. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது? முல்லைப்பாட்டு
7. நனந்தலை உலகம் என்பதன் பொருள் என்ன? அகன்ற உலகம்
8. நேமி என்பதன் பொருள் என்ன? சக்கரம்
9. கோடு என்பதன் பொருள் என்ன? மலை
10. கொடுஞ்செலவு என்பதன் பொருள் என்ன? விரைவாக செல்லுதல்
11. நறுவீ என்பதன் பொருள் என்ன? நறுமணமுடைய மலர்கள்
12. விரிச்சி என்பதன் பொருள் என்ன? நற்சொல்
13. சுவல் என்பதன் பொருள் என்ன? தோள்
14. தூஉய் என்பதன் பொருள் என்ன? தூவி
15. மூதூர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? பண்புத்தொகை
16. உறுதுயர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? வினைத்தொகை
17. கைதொழுது என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? மூன்றாம் வேற்றுமைத் தொகை
18. தடக்கை என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? உரிச்சொல் தொடர்
19. காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது? முல்லை
20. முல்லை நிலத்தில் பொழுதுகள் யாவை? கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
21. முல்லை நிலத்திற்கு சிறுபொழுது எவை? மாலை
22. முல்லை நிலத்தில் காணப்படும் நீர் வகை? குறுஞ்சுனை நீர், காட்டாறு
23. முல்லை நிலத்தில் காணப்படும் மரம் எது? கொன்றை, காயா, குருந்தம்
24. முல்லை நிலத்தில் காணப்படும் பூ வகை எது? முல்லை, பிடவும், தோன்றிப்பூ
25. முல்லை நிலத்தில் உரிப்பொருள் என்ன? இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)