10th தமிழ் இயல் 2.5 தொகை-நிலைத்-தொடர்கள்
1. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது? சொற்றோடர் அல்லது தொடர் எனப்படும்
2. பெயர்ச்சொல்லோடு வினைச் சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உறுபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அது? தொகை நிலைத்தொடர் ஆகும்
3. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? 6 வகைப்படும்
4. 6வகையான தொடர்நிலைத்தொடர்கள் யாவை? வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை
5. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது? உறுப்பும் பயனும் உடன் தொக்க தொகை
6. உடன் தொக்க தொகை எடுத்துக்காட்டு தருக? தேர் பாகன் (தேரை ஓட்டும் பாகன்)
7. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது ----- எனப்படும்? வினைத்தொகை
8. காலம் கரந்த பெயரெச்சமே? வினைத்தொகை
9. வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக? வீசுதென்றல், கொல்களிறு
10. நிறம், வடிவம், சுவை, அளவு, முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயர்களும், அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை "என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்புப் உருபுகளும் மறைந்து வருவது ----- எனப்படும்? பண்புத்தொகை
11. பண்புடத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக? செங்காந்தள், வட்டத்தொட்டி, இன்மொழி
12. சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் "ஆகிய" என்னும் பண்பு உருபு தொக்கி வருவது? இருபெயரொட்டுப் பண்புத்தொகை
13. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு உதாரணம் தருக்க? சாரைப்பாம்பு, மார்கழித் திங்கள்
14. உவமைக்கு பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது? உவமைத்தொகை எனப்படும்
15. உவமைத்தொகை எடுத்துக்காட்டு தருக? மலர்க்கை (மலர் போன்ற கை)
16. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறந்து வருவது? உம்மைத்தொகை
17. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வருவது? உம்மைத்தொகை
18. உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக? அண்ணன் தம்பி, தாய்சேய்
19. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலை தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது? அன்மொழித் தொகை எனப்படும்
20. அன்மொழித் தொகைக்கு எடுத்துக்காட்டு தருக? சிவப்புச் சட்டை பேசினார், முறுக்கு மீசை வந்தார்
21. "உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம் " - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை? மோனை, எதுகை
22. "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி " - என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது? கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
23. பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது? அன்மொழித்தொகை
24. கொண்டல் என்பது எதைக் குறிக்கிறது? கிழக்கு
25. கோடை என்பது எதைக் குறிக்கிறது? மேற்கு
26. வாடை என்பது எதைக் குறிக்கிறது? வடக்கு
27. தென்றல் என்பது எதைக் குறிக்கிறது? தெற்கு
28. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? கண்ணதாசன்
29. அந்த இடம் காற்றே வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது என்று எழுதியவர் யார்? அப்துல் ரகுமான்
30. கண்ணிற்கு காட்சி தராமல் இருக்கும் மலர்கள்? ஆல மலர், பலா மலர்
31. அறிய இயலாத மலர்கள் யாவை? கள்ளி மலர், பாங்கர் மலர்ந்த
32. புறத்தே காட்சி படாமல் உள்ளேயே இருக்கும் மலர்கள்? அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா
33. மக்கள் விரும்பாத மலர்கள்? நெருஞ்சி. எருக்கு, பூனை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை
34. இனிப்பான பூ எது? இலுப்பை
35. இலுப்பை பூவை விரும்பி உண்ணும் விலங்கு எது? கரடி
36. குடிநீருக்காக தன் மணத்தை ஏற்றும் பூ எது? பாதிரிப் பூ
37. எந்தப் பூவில் காய்தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும்? மூங்கில் பூ
38. பூக்களைப் பற்றிய அரிய இலக்கிய செய்தி என்ற நூலின் ஆசிரியர் யார்? இளஞ்சேரன்
39. storm ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? புயல்
40. tornado ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? சூறாவளி
41. land breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? நிலைக்கற்று
42. tempest ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? பெருங்காற்று
43. sea breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? கடல்காற்று
44. whirlwind ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? சூழல் காற்று
45. குயில் பாட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்? பாரதியார்
46. அதோ அந்த பறவை போல் என்ற நூலின் ஆசிரியர் யார்? ச. முகமது அலி
47. உலகின் மிகச் சிறிய தவளை என்ற நூலின் ஆசிரியர் யார்? எஸ். ராமகிருஷ்ணன்