10th தமிழ் இயல் 2.2 காற்றே-வா
பாரதியார்
1. காற்றே வா என்ற கவிதை வரியைப் பாடியது யார்? பாரதியார்
2. "காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு" என்று கவிதை எழுதியவர் யார்? பாரதியார்
3. மயலுறுத்து என்பதன் பொருள் என்ன? மயங்கச்செய்
4. ப்ராண - ரஸம் என்பதன் பொருள் என்ன? உயிர் வளி
5. லயத்துடன் என்பதன் பொருள் என்ன? சீராக
6. பாரதியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்? நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை
7. எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்? பாரதியார்
8. சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் யார்? பாரதியார்
9. குயில்பாட்டு. பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களை படைத்தவர் யார்? பாரதியார்
10. பாரதியார் இயற்றிய குழந்தைகளுக்கான நூல்கள் யாவை? கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி
11. பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்? பாரதியார்
12. பாரதியார் எந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்? இந்தியா, சுதேசமித்திரன்
13. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ----- எனப்படும்? வசனகவிதை
14. ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் வசனகவிதை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? பாரதியார்
15. புதுக்கவிதை எதிலிருந்து உருவாகியது? வசனகவிதை
16. உணர்ச்சிபொங்க கவிதை படைக்கும் இடங்களில் ----- தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனக் கவிதை வடிவத்தை இலகுவதாக கையாண்டுள்ளார்? யாப்பு
17. திக்குகள் எட்டும் சிதறி - தீம்தரிகிட தீம்தரிகிட என்ற வரியைப் பாடியது யார்? பாரதியார்