10th தமிழ் இயல் 1.1 அன்னை-மொழியே

பாவலரேறு பெருஞ்சித்திரனார், 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : கவிதைப்பேழை: அன்னை மொழியே - பாவலரேறு பெருஞ்சித்திரனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள் மொழி

10th தமிழ் இயல் 1.1 அன்னை-மொழியே
: :

1. அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமியே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! - என்ற வரி இடம்பெற்ற நூல் எது? கனிச்சாறு
2. தென்னன் என்பது எதனைக் குறிக்கிறது? பாண்டிய மன்னன்
3. கனிச்சாறு என்ற நூலை இயற்றியவர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார்
4. சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் என கூறியவர் யார்? க. சச்சிதானந்தன்
5. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன? துரை. மாணிக்கம்
6. பெருஞ்சித்திரனார் எந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்? தென்மொழி, தமிழ்ச்சிட்டு
7. எண்சுவை எண்பது நூலின் ஆசிரியர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார்
8. பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது? திருக்குறள் மெய்ப்பொருளுரை
9. பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை? உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாற, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள்