கோபல்ல கிராமம் -கி.ராஜநாரயணன் | pamohan.in
புத்தக விமர்சனம், BOOK REVIEW
கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
தெலுங்கு தேசத்தை சேர்ந்த ஒரு இந்து பெண்ணை கல்யாணம் கட்டிக்க துளுக்க ராஜா ஆசைப்படுகிறான். ஆன அந்த பொண்ணுக்கும் அவங்க குடும்பத்துக்கும் அதுல விருப்பமில்ல. அதனால பொண்ணோட சுற்றமும் நட்பும் மேரேஜ்க்கு முன்னாள் ஊர வீட்டு ஓடி வந்திடுறாங்க. அப்படியாக ஓடி வந்தவங்க எல்லாரும் ஊண் உறக்கம் எதுவும் இல்லாம பல நாள் பல இன்னல்களை கடந்து தெற்கு நோக்கி வராங்க.
இந்த கடும் பயணத்துல ஒரு சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்து போறாங்க. அதுல டிராஜிடி என்னன்னா? அந்த கல்யாண பொண்ணும் வர வழியிலேயே செத்துப்போகுது. (?????)
இறந்து போனவங்கல அங்கங்கயே பொதச்சிட்டு மொத்த கும்பலும் ராஜாவோட ஆட்களிடமிருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள ரொம்ப தொலைவு வந்திடுராங்க. அப்படி வந்த இடம் தான் இந்த காடு.
இதுக்கு மேல ஓட முடியாதுன்னு பெருசுங்கல்லாம் நினைக்குதுங்க. அதனால அந்த காட்டை அழிச்சு கழனியாக்கி உழுது பயிரிட்டு ஊராக கிராமமாக வாழத் தொடங்குது அந்த கும்பல்.
அந்த கிராமம் தான் இந்த கோபல்ல கிராமம்.
பல வருடங்கள் கழித்து….
எல்லாருக்கும் இருப்பது போல கோபல்ல கிராமத்தாருக்கும் சின்னதாகவும் பெரியதாகவும் குட்டையாகவும் நீளமாகவும் இருந்தது – பெயர்.
பேரு மட்டுமில்ல ஒவ்வொருவருக்கும் ஒரு காரணப் பெயரும் அதாங்க பட்டப்பேரும் இருந்தது. ஒவ்வொரு பட்டப்பேருக்கும் பின்னாடி ஒரு நிகழ்ச்சியோ சம்பவமோ இருந்தது.
உதாரணத்துக்கு பயிருழவு பங்காரு நாயக்கர். இவரு பேரு பங்காரு தான். ஆனா பங்காருன்னு சொன்னா யாருக்கும் தெரியாது. எந்த பங்காருன்னு கேப்பாங்க. பயிருழவு பங்காருன்னு கேட்டாதான் எல்லாருக்கும் தெரியும்.
அது என்ன பயிருழவுன்னு தான கேக்கறிங்க. ஒருத்தன் மேல இருக்கிற காண்டுல அவன் கழனியில வளந்துருக்கிற பயிர யாருக்கும் தெரியாம நைட்டு போய் உழுதுட்டு வந்துட்டான்.
கழனிக்காரனுக்கோ பயிரும் போச்சு உழுதவன் யாருன்னு தெரியாம நிம்மதியும் போச்சு. சில நாள் கழிச்சி பாத்தா அந்த கழனியில இதுநாள் வரை இல்லாத அளவுக்கு செழிப்பா பயிர் முளைச்சி அதிக மகசூல் கொடுத்துச்சி.
இவ்வளவு மகசூல் வரத்துக்கும் நான்தான் காரணம். ஏன்னா நான் தான் பயிரை உழுதேன்னு நம்ம பங்காரு எல்லார் கிட்டயும் சொன்னாரு. இவன் செஞ்சதுல கொஞ்சம் நல்லதும் இருக்கவே ஜனங்களும் பங்காருவ உதைக்காம விட்டுடறாங்க. அன்னையில இருந்துதான் பங்காரு பயிருழவு பங்காருன்னு ஆயிட்டாரு.
கோபல்ல கிராமத்தோட பெரிய மனுசன் பேரு கோயிந்தப்ப நாயக்கர். அவருக்கு அரை டசன் தம்பிங்க. எல்லாரும் கூட்டுக்குடும்பமா வாழுறாங்க.
இது போல அந்த கிராமத்துல இருக்கிறவங்க ஒவ்வொருத்தர் குறித்தும் அறிமுகம் தான் இந்த புக் மொத்தமும். கதைன்னு பாத்தா பெருசா எதுவும் இல்ல. சின்ன சின்ன சம்பவங்கள் தான். இருந்தாலும் புக்க எடுத்த கீழ வைக்க முடியாதபடி செமையான ரைட்டிங்.
காடு கிராமமாக ஆனதிலிருந்து இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இந்தியாவின் ஆட்சியாளராக பதவி ஏற்கும் வரையான காலகட்டத்தில் கோபல்ல கிராமத்தின் முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டு வரும் அற்புத படைப்பு தான் இந்த நாவல் என்று சொன்னால் அது மிகையாகது.
நூல் : | கோபல்ல கிராமம் |
ஆசிரியர் : | கி ராஜநாராயணன் |
பக்கங்கள் : | 200 |
விலை : | 225 |
பதிப்பகம் : | காலச்சுவடு |