10th தமிழ் இயல் 3.5 தொகாநிலைத்-தொடர்கள்
1. ஒரு தொடர் மொழியின் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது? தொகாநிலைத் தொடர்
2. தொகாநிலைத் தொடர்க்கு எ கா? காற்று வீசியது, குயில் கூவியது
3. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? 9வகைப்படும்
4. 9வகையான தொகாநிலை தொடர்கள் யாவை? எழுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்
5. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது? எழுவாய் தொடர் எனப்படும்
6. எழுவாய் தொடர் எ கா? இனியன் கவிஞர் - பெயர் காவிரி பாய்ந்தது - வினை பேருந்து வருமா - வினா
7. விளியுடன் வினை தொடர்வது? விளித்தொடர் எனப்படும்
8. விளித்தொடர்க்கு எ கா? நண்பா எழுது
9. வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன? வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது ஆகும்
10. வினைமுற்றத் தொடர்க்கு எ கா? பாடினாள் கண்ணகி
11. பெயரெச்சத் தொடர் என்றால் என்ன? முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்
12. பெயரெச்சத் தொடர்க்கு எ கா? கேட்ட பாடல்
13. வினையெச்சத் தொடர் என்றால் என்ன? முற்றப் பெறாத வினை, வினைச்சொல்லைத் கொண்டு முடிவது
14. வினையெச்சத் தொடர்க்கு எ கா? பாடி மகிழ்ந்தனர்
15. வேற்றுமை தொடர் என்றால் என்ன?வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்
16. வேற்றுமை உருபுகள் எவை? ஐ, ஆல், கு, ன், அது, கண், விளி
17. இடைச்சொல் தொடர் என்றால் என்ன? இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்
18. இடைச்சொல் தொடர்க்கு எ கா? மற்றொன்று - மற்று + ஒன்று
19. உரிச்சொல் தொடர் என்றால் என்ன? உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்
20. அடுக்குத் தொடர் என்றால் என்ன? ஒரே சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது ஆகும்
21. அடுக்குத் தொடர்க்கு எ கா? வருக வருக வருக
22. பின்வருவனவற்றுள் முறையான தொடர்? தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு
23. "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது? சிற்றுர்
24. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றோடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது? வேற்றுமை உருபு
25. காசிக்காண்டம் என்பது? காசி நகரத்தின் பெருமைப் பாடும் நூல்
26. விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழை பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானுறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை?
இன்மையிலும் விருந்து
27. "மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" என்ற வரி இடம் பெற்ற நூல் எது? முக்கூடற்பள்ளு
28. கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் என்ற வரியை இயற்றியவர்? காளமேகப்புலவர்