6th தமிழ்-இயல் 2.2 காணி-நிலம்

6th தமிழ்-இயல் 2.2 காணி-நிலம்
: :

1. "காணி நிலம் வேண்டும் - பராசக்தி" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? பாரதியார்
2. காணி என்பதன் பொருள் என்ன? நில அளவை குறிக்கும் சொல்
3. மாடங்கள் என்பதன் பொருள் என்ன? மாளிகையின் அடுக்குகள்
4. சித்தம் என்பதன் பொருள் என்ன? உள்ளம்
5. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்? பாரதியார்
6. பாரதியாரின் இயற்பெயர் என்ன? சுப்பிரமணியன்
7. சுப்பிரமணியனுக்கு எட்டயபுர மன்னர் எந்த பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்? பாரதி
8. தம் கவிதை வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டியவர் யார்? பாரதியார்
9. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்? பாரதியார்
10. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றை படைத்தவர் யார்? பாரதியார்
11. இளமையிலே சிறப்பாக கவிபாடும் திறன் பெற்றவர் யார்? பாரதியார்
12. பாரதியாரின் படைப்புகள் எவை? பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
13. கிணறு என்பதனை குறிக்கும் சொல் என்ன? கேணி
14. நன்மாடங்கள் பிரித்து எழுதுக? நன்மை + மாடங்கள்
15. முத்து + சுடர் சேர்த்து எழுதுக? முத்துச்சுடர்
16. நிலத்தினிடையே பிரித்து எழுதுக? நிலத்தின் + இடையே
17. நிலா + ஒளி சேர்த்து எழுதுக? நிலாவொளி
18. முத்துச்சுடர்போல என்பது எதைக் குறிக்கிறது? நிலாஒளி
19. தூய நிறத்தில் என்பது எதைக் குறிக்கிறது? தென்றல்
20. சித்தம் மகிழ்ந்திட என்பது எதைக் குறிக்கிறது? மாடங்கள்