7th தமிழ் இயல் 2.1 அப்படியே-நிற்கட்டும்-அந்த-மரம்
1. "ஊரின் வடகோடியில் அந்த மரம் ஐந்து வயதில் பார்த்தபோது" என்ற பாடலின் ஆசிரியர் யார்? ராஜமார்த்தாண்டன்
2. பரவசம் என்பதன் பொருள் என்ன? மகிழ்ச்சி பெருக்கு
3. துஷ்டி கேட்டால் என்பதன் பொருள் என்ன? துக்கம் விசாரித்தால்
4. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையை எழுதியவர் யார்? ராஜமார்த்தாண்டன்
5. ராஜமார்த்தாண்டன் பன்முகத்தன்மை என்ன? கவிஞர், இதழாளர், கவிதைத், திறனாய்வாளர்
6. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்? ராஜமார்த்தாண்டன்
7. ராஜமார்த்தாண்டனின் எந்த நூல் தமிழ் வளர்ச்சி துரையின் பரிசை பெற்றது? ராஜமார்த்தாண்டன் கவிதைகள்
8. சிறந்த தமிழ்க் கவிதைகளை தொகுத்து 'கொங்குதேர் வாழ்க்கை ' என்னும் தலைப்பில் நூலாக்கியவர் யார்? ராஜமார்த்தாண்டன்
9. "கொப்புகள் விலக்கி கொத்துக் கொத்தாய் கருவேலங்காய்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? கலாப்ரியா
10. நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது எது? கோலிக்குண்டு
11. 'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடுபவை எவை? மண் ஓட்டிய பழங்கள்
12. 'பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? பெயர் + அறியா
13. 'மனமில்லை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? மனம் + இல்லை
14. நேற்று + இரவு என்பதனை சேர்த்து எழுதுக? நேற்றிரவு